உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் அமீரக(UAE) விசிட் விசா விண்ணப்பிக்கும் புதிய வசதி அறிமுகம்!
கைத்தொலைபேசி ஊடாக UAE விசா விண்ணப்பிக்கும் புதிய வசதி
ஸ்மார்ட்போன் வகை கைத் தொலைபேசிகள் ஊடாக அப் (மென்பொருள்) நிறுவி அதன் மூலம் தற்காலிக விசா விண்ணப்பிக்கும் வசதியை (30 நாள் சுற்றுலா விசா) உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சு.
இதன் மூலம் அமீரக பிரஜைகள் தமது கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்கும் விண்ணப்பிக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலான அரச சேவைகள் மற்றும் நிறுவனங்கள் இவ்வாறு நவீன யுகத்திற்கேற்ப மாற்றம் காண இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது காணப்படும் ஸ்மார்ட் போன் மென்பொருளிலேயே பல்வேறு சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (கூகிள் ப்ளேயில் UAE – MOI என்று தேடுவதன் மூலம் பயனர்கள் இம் மென்பொருளை தரவிறக்கிக்கொள்ளலாம்)
0 comments