இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 60 மஸ்ஜிதுகள் அழிக்கப்பட்டன!
காஸா: கடந்த ஒரு மாத காலமாக ஃபலஸ்தீன் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல்களில் 60 மஸ்ஜிதுகள் அழிக்கப்பட்டுள்ளன.காஸா நகரில் மட்டும் 20 மஸ்ஜிதுகள் அழிக்கப்பட்டுள்ளதாக காஸாவின் மார்க்கவிவகாரத்துறை அமைச்சகம்(அவ்காஃப்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான் யூனுஸில் 17 மஸ்ஜிதுகள், வடக்கு காஸா முனையில் 11 மஸ்ஜிதுகள், மத்திய காஸாவில் 10 மஸ்ஜிதுகள், ரஃபாவின் தெற்கு நகரில் 2 மஸ்ஜிதுகள் அழிக்கப்பட்டுள்ளன. வான் வழி மற்றும் பீரங்கித்தாக்குதல்களில் 150 மஸ்ஜிதுகள் சேதமடைந்துள்ளன.
இதனிடையே, காஸா விவசாயத்துறையில் இஸ்ரேலின் கொடூர தாக்குதலினால் 25 கோடி அமெரிக்க டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Category: உயர் கல்வி
0 comments