பாலஸ்தீனிய அகதி பெண்ணை திருமணம் செய்கிறார் துபாய் இளவரசர் முகமது அல் மக்தும்!
துபாய் நாட்டு இளவரசர் முகமது அல் மக்தும் (வயது 28) பாலஸ்தீனிய அகதி பெண்ணான காலிலா செய்த் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக இன்று அறிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் இருந்து அகதியாக வந்த காலிலா அரபு தலைநகர் அருகே குடிசைநகரத்தில் தெருஓரத்தில் வளர்ந்தவர். துபாய் மன்னர் ரஷீத் அல் மக்தும்மின் இரண்டாவது மகனான மக்தும் தலைநகர் அருகே உள்ள பின்தங்கிய பகுதிகளில் அறக்கட்டளை பணியின்போது கடந்த வருடம் மார்ச் மாதம் காலிலாவை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் சந்தித்துள்ளனர். பின்னர் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது.
அவரது காதல் வாழ்க்கை குறித்து பல ஆண்டுகளாக மிகவும் ஊகங்கள் எழுந்தன. அவருக்கும் அவரது உறவுகார பெண்ணுக்கும் இடையே கடந்த 2008 முதல் 2013ம் ஆண்டு வரையில் காதல் இருந்தது. முகமது அல் மக்தும் தனது உறவினர் ஷைகா ஷைகா அல் மக்தூமை நிச்சயம் செய்திருந்தபோதிலும், அவர்களது உறவு நிலைக்காமல் கசப்புடன் முடிந்தது. இதனையடுத்து சில மாதங்கள் கழித்து மற்றொரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு பெற்றோர்கள் நடத்திவைக்க இருந்த திருமணமும் ரத்து செய்யப்பட்டது. அதற்கான காரணம் வெளியே தெரிவிக்கப்படவில்லை. முகமது அல் மக்தும் கவிதை எழுதுவது மற்றும் குதிரைகள் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர்.
இந்நிலையில் பாலஸ்தீனிய அகதி பெண்ணான காலிலா மீது முகமது அல் மக்தும் காதல் கொண்டுள்ளார். துபாய் நாட்டு சுற்றும் வதந்திகள்படி, இளவரசர் முகமது அல் மக்தும்மின் காதலை அவரது தந்தை மன்னர் ரஷீத் அல் மக்தும் எதிர்த்ததாக கூறப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் அந்த பெண்ணுடன் உறவு தொடரும் என்றால், மகனுக்கான சொத்துரிமை நீக்கப்படும் என்று மிரட்டியதாகவும், ஆனால் அதற்கு பயனில்லை என்றும் தெரியவந்துள்ளது. இளவரசர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் மன்னர் தனது நிலையை மறுபரிசீலனை செய்யும் அளவிற்கு வந்துள்ளார். இறுதியாக மன்னர் ஏற்றுக் கொண்டதாகவும், ஆசியை வழங்கினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: துபாய்
0 comments