ஹஜ்ஜில் நடந்த ஒரு சம்பவம் – சைத்தானின் சூழ்ச்சி செயலை அந்த ஷைத்தானிடமே அல்லாஹ் சேர்த்து விட்டான்.அல்ஹம்துலில்லாஹ்!

ஹஜ்ஜுக்கு போன மக்களில் சிலர் அவ்லியாக்கள் மற்றும் ஞானியார்கள் என்று இவர்கள் நம்பும் மனிதர்கள் பாடி வைத்த ஷிர்க்குகள் நிறைந்த கவிதைப் பாடல்களை ஞானப்பாடல்களை (?!) தங்களின் Smart Phone ல் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் ... இந்நிலையில் மினாவில் சைத்தானின் நடுபாகத்தில் கல்லெறியும் போது இது போன்ற பாடல்கள் அடங்கிய தமது கையிலிருந்த மொபைலும் சேர்ந்தே உள்ளே விழுந்துவிட்டதாக அறிந்தேன் .. ...விழ வைத்தான் எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ் என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது ... அல்ஹம்துலில்லாஹ் ....
அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
...மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்;. எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (2:197)
இப்படி அல்லாஹ் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ள சொல்லும் பொருட்களில் அவ்லியாக்கள் (?!) ஞானியார்களின் ஷிர்க்குகள் கலந்த பாடல்களும் இருந்திருக்கிறது அஸ்தஃபிருல்லாஹ்..... இவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது ? அவ்லியா பாசத்தை என்னவன்று சொல்வது ?.. நமக்கு வருத்தம்தான் ஏற்படுகிறது
தான் செய்வது ஷிர்க் தான் என்கிற அறியாமையிலும் , தான் செய்வது சரிதான் என்றும் .. அல்லாஹ்விடத்தில் நன்மைதான் கிடைக்கும் என்கிற நம்பிக்கையிலும் , பல மனிதர்களை அவ்லியாக்கள் என நம்பி இஸ்லாத்திற்கு விரோதமாக அவ்லியாக்களின் புகழுக்கேற்ப , வசூலுக்கேற்ப கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான தர்ஹாக்களில் அவரின் சன்னதியில் கை கட்டி நிற்பதும் அவரிடம் துஆ கேட்பதும் , அவருக்கு காணிக்கை வழங்குவதும் , அவர் பெயரில் ஆடு மாடு அறுத்து நேர்ச்சை செய்வதும் ஆண்டுவிழா கொண்டாடுவதும் நபி வழிதான் என அறியாமையில் அநியாயத்திற்கு இதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றால் இவர்கள் சைத்தானின் கோரப்பிடியில் சிக்கி போய்விட்டிருக்கிறார்கள் என்பதை மிகுந்த வருத்தத்துடன் இங்கே நாம் குறிப்பிட வேண்டியதிருக்கிறது !
ஆக அந்த சைத்தானின் செயலை சைத்தானுக்கே சமர்பிக்க வைத்த ஏக இறைவன் அல்லாஹ்வை இவர்கள் இனியாவது சரியாக புரிந்து கொள்வார்களா ?!..
தங்களுடைய அவ்லியா பாசத்திலிருந்து இவர்கள் விடுபடுவார்களா ?...
ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகனைப் போன்று ஆகி விடுகிறார்கள் .. இப்படிப்பட்டவர்கள் மீண்டும் ஷிர்க்கில் போய் விழாமல் அல்லாஹ்வை மட்டுமே நம்பி தங்களின் செயல்களை மாற்றிக் கொள்வார்களா ?...
இவர்கள் இதனை சரியாக உணரவில்லையெனில் பணம் செலவழித்து செய்த ஹஜ்ஜினால் தங்களுக்கு பலன் ஏதும் கிடைக்குமா ?.... இதனை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்
சைத்தானின் தர்ஹா மாயையில் இன்னும் விடுபடாமல் இருக்கும் அன்பு சகோதர சகோதரிகளே !.. இன்ஷா அல்லாஹ் ..நீங்கள் விருப்பு வெறுப்பு இல்லாமல் உண்மையை அறிந்து கொள்ள கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்பதற்காகவேதான் இந்த பதிவு , மற்றபடி யாரையும் புண்படுத்த அல்ல !
ஹஜ்ஜை நிறைவேற்றி தாயகம் திரும்ப இருக்கும் எனதருமை உறவினர்களே ! சகோதர, சகோதரிகளே !. நண்பர்களே ! எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ் உங்களுடைய ஹஜ்ஜை முழுமையாக அங்கீகரித்து, ஜன்னத் ஃபிர்தௌஸ் என்ற சொர்க்கச் சோலைகளில் உங்களை புகச் செய்வானாக! உங்களது பாவங்களையும் , எங்களது பாவங்களையும் அவன் மன்னித்தருள்வானாக! ஆமீன்!! ஆமீன் !!.. யாரப்பில் ஆலமீன் !!...
- தக்கலை கவுஸ் முஹம்மத்
Category: சமுதாய செய்தி
0 comments