Unknown |
12:00 AM |
0
comments
தமிழகத்திலேயே முதல்முறை யாக கிருஷ்ணகிரி மா விவசாயிகள் ஒன்றிணைந்து கூட்டுறவு முறையில் மா விற்பனை மையம் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் அந்தந்த மாவட்டத் தின் விளை பொருட்களுக்கு விவ சாயிகள் நிறுவனம் தொடங்கி நேரடி வணிகத்தில் ஈடுபடுகின்றனர். குறிப் பாக தருமபுரியில் சிறு தானியங் களுக்கும், கிருஷ்ணகிரி மாவட் டத்தில் மா விளைச்சலுக்கும் விவசாயிகளே ஒன்றிணைந்து நிறுவனம் ஒன்றை தொடங்கி யுள்ளனர்.
தமிழக அரசு உதவியுடன் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைப்படி இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 47 ஆயிரம் ஹெக்டேர் பரப் பளவில் மா சாகுபடி செய்யப் படுகிறது. சாகுபடி செய்யப்படும் மாம்பழங்களை உள்ளூர், வெளி யூர் வியாபாரிகள் விவசாயிகளிட மிருந்தும், இடைத்தரகர்கள் மூலம் வாங்கி விற்பனை செய்து வருகின் றனர். இதனால் விவசாயிகளுக்கு குறைந்த அளவு லாபம் கிடைக் கிறது. மேலும், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் மாம்பழங் களை கார்பைட் கற்களைக் கொண்டு பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். இதனை உட்கொள்பவர்கள் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளும், பொதுமக்களும் பயன் அடையும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.டி.எம்.பி.சி.எல். எனப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட மா உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்னும் நிறுவனத்தை மா விவசாயிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட பொருளாளர்
செந்தில் சண்முகம், ‘தி இந்து’-விடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் முயற்சியில், மா உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும், பொதுமக்களுக்குத் தரமான மா வகைகளை குறைவான விலையில் விற்பனை செய்வதற்காகவும் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதியுதவியுடன் செயல்படும் இந்த நிறுவனத்தில் 1,000 விவசாயிகள் ரூ.1,000 சந்தா தொகை செலுத்தி உறுப்பினராக சேர வேண்டும். இதுவரை 300-க் கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்துள்ளனர்.
இந்தியாவில் முதன்முறையாக மா விவசாயிகளுக்கான நிறுவனம் தொடங்கப்பட்டு, மாம்பழம் விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது மாங்கனி கண்காட்சியில் விற்பனை மையம் தொடங்கி நுகர்வோருக்கு விஞ்ஞான முறையில் (எத்திலீன் வாயு முறையில்) பழுக்க வைக்கப்பட்ட, உடல் நலத்துக்கு கேடு இல்லாத மாம்பழங்களை வெளிமார்க்கெட்டை விட குறைவான விலைக்கு விற்பனை செய்கிறோம். தொடர்ந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாநிலங்களிலும் மாம்பழங்கள் விற்பனை செய்ய நேரடி வணிகத்திலும், சந்தையிலும் ஈடுபட உள்ளோம்.
வெளிச் சந்தையை விட கிலோ வுக்கு ரூ.10 குறைவாக விற்கப்படு கிறது. மேலும், மாம்பழங்கள் பெரிய அளவிலும், முதல் தரமானவை என்பதாலும் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Category:
மாநில செய்தி
0 comments