.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

குழந்தை பற்களும், அதன் பராமரிப்புகளும் - டாக்டர் யூசுஃப்!

Unknown | 8:52 AM | 0 comments

குழந்தைகளின் பற்களைப்பற்றி…..
குழந்தைகளுக்குப் பால் பற்கள்  (Milk teeth) பொதுவாக, பிறந்த 6 மாதங்களின் ஈறுகளில் வெளிப்படும். இது ஒவ்வொரு குழந்தைகள் மத்தியிலும் வேறுப்படும். என்றாலும் 20 பால் பற்களும் 6 மாதம் முதல்  3 ஆண்டுகளுக்கு இடையில் வர வேண்டும்.
6 லிருந்து 11 வயது வரையிலான கட்டத்தில் குழந்தைகளின் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் (Permanent teeth) வரும். 20 பால் பற்களும் விழுந்து 20 நிரந்தர பற்கள் வருவதுமில்லாமல் புதிதாக 12 கடைவாய் பற்களுடன் (Molar teeth) சேர்த்து ஆக மொத்தம் 32 நிரந்தர பற்கள் (Permanent teeth) வரும். இதில் கடைசியாக வரும் permanent teeth தான் அறிவு பற்கள் (Wisdom teeth) என்பார்கள்.
கவனிக்கவேண்டியவைகள்:
• குழந்தையின் பற்கள் வருவதற்கு முன்பிருந்தே பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் கவனிக்க வேண்டியவைகளில் முக்கியமானது, குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் கரண்டி முதலான பாத்திரங்கள் சுத்தமாகவும்,  பாக்டீரியா போன்ற கிருமிகள் இல்லாததாகவும் சுத்தமாக பயன்படுத்தவேண்டும்.
• குழந்தை இரவில் தூங்கக்கூடிய நேரத்தில் பால் பாட்டில், பழச்சாறு பாட்டில் அல்லது சர்க்கரை அதிகம் கொண்டுள்ள பொருட்களான சாக்லேட், Candy போன்ற பொருட்களைக் கொடுத்து படுக்க போடாதீர்கள். இவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் அமிலங்கள் பற்சிதைவு (Dental decay) உண்டாக்கும். குழந்தை  6 மாதங்களாக இருக்கும் போதே கப் கொண்டு குடிநீர் குடிக்கத் தொடங்க குழந்தையை ஊக்குவிங்கள். பிறகு 1 அல்லது 1 1/2 வயது இருக்கும் சமயம் ஏனைய Liquid பொருட்களுடன், குழந்தை மருத்துவரின் ஆலோசனையில் பெயரில் மற்ற உணவு பொருட்கள் தரலாம்.
• மேலை நாட்டில் Public water fluoridation, school water fluoridation உள்ளது. இதன் முலம் தானாக நம்முடைய உடலுக்கு Flouride சென்று பற்களுக்கு வலுவூட்டுகிறது. இவ்வாறான Systemic fluoridation அல்லது Topical fluoride treatment பல் மருத்தவரிடம் கேட்டு செய்யலாம்.
• குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளைத் தாருங்கள். இது ஆரோக்கியமான ஈறுகளுக்கும், வலுவான பற்கள் உருவாக்கவும், மற்றும் பல் சிதைவு நோயை தவிர்க்கவும் உதவும். இச்சத்தான உணவுகள்  தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் அதிகம் இருக்கிறது. சர்க்கரை மற்றும் கேக், பிஸ்ஸா, வெள்ளை ரொட்டி போன்ற பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
• ஆல்கஹால் உள்ள mouthwashes குழந்தைக்குக் கொடுக்க கூடாது. குழந்தை 6 வயதான பிறகு பல் சிதைவு (Dental decay), பல் துவாரங்கள் இருந்தால் ல் மருத்துவரின் ஆலோசனை பெயரில்  ஃப்ளோரைடு (Fluoride) உள்ள Mouthwash கொண்டு வாயைக் கழுவலாம். ஆனால் குழந்தை அதை விழுங்காமல் இருக்க மேற்பார்வையிட வேண்டும்.
• சிகரெட் புகை (இரண்டாம்நிலை புகைபிடித்தல்) போன்ற புகையிலை சார்ந்த விஷயங்களிடம் இருந்து குழந்தைகளைத் தள்ளி வையுங்கள். இரண்டாம் நிலை புகை என்பது புகைப்பிடிக்கிறவர்களிடம் இருந்து கிடைக்கும் புகை. புகையிலையின் புகை பற்சிதைவு மற்றும் பல நோய்களுக்குக் காரணமானது. இவற்றின் ஆபத்துகளை சிறுவயது முதல் குழந்தைகளுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும்.
• குழந்தைகள் விளையாடும் சமயங்களில் பற்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். அப்படி எதாவது பிரச்சனை வந்தால் உடனே பல் மருத்துவரை அணுகவும்.
• குழந்தை தனது விரல்கள் மற்றும் கட்டை விரலை (Thumb sucking habit) சப்புகிறதா? என ஆரம்பம் முதலே கவனிக்க வேண்டும். அவ்வாறான பழக்கங்கள் உள்ளன என தெரிந்தால் உடனே அதை நிறுத்த முயற்சிசெய்யவேண்டும். என்ன செய்தாலும் குழந்தை நிறுத்தவில்லை என்றால் உடனே பல் மருத்துவரை அணுகி ஆலோசனைபெற வேண்டும்.
குழந்தை பற்களும், அதன் பராமரிப்புகளும் - டாக்டர் யூசுஃப்!
•    பற்கள் துலக்குதல் (Tooth Brushing for kids) :   குழந்தைக்கு எப்பொழுது பற்கள் வெளிப்படுகிறதோ அக்கால கட்டத்திலிருந்து சுமார் 2 1/2 வயது அல்லது 3 வயது  வரை மென்மையான துணி அல்லது Gauge Pad (இது பார்மஸியில் கிடைக்கும்) இவற்றைக்கொண்டு குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தையின் பற்களையும், ஈறு மேடுகளையும் சுத்தம் செய்யவேண்டும். இவ்வயதில் இருந்தே குழந்தையின் Oral Hygiene பற்றி பெற்றோர்  கவலைப்படவேண்டும். தன்னைத்தானே பல் துலக்கவேண்டும் என நிர்ப்பந்திக்ககூடாது. பிறகு 3 வயதாகும் பொழுது மென்மையான டூத் ப்ரஷ் (Soft kids tooth brush) மற்றும் Kids டூத் பேஸ்ட் ( Kids tooth paste) கொண்டு பெற்றோர்கள் தாங்கள் குழந்தைகளுக்குப் பற்களை காலையிலும், இரவிலும் துலக்க ( Teeth brushing) வேண்டும். மேலும் தன்னைத்தானே செய்துகொள்ளவும் கற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு 6 மாதங்கள் அல்லது ஒரு வருடம் செய்த பிறகு குழந்தையின் நான்கு வயது முதல் காலை நேரங்கள் குழந்தை அவர்களாகவே பற்களைத் துலக்க (Brushing) செய்யக் கூறல்வேண்டும்.  சில மாதங்கள் வரையிலாவது பெற்றோர் இரவில் தம் குழந்தைக்கு Brushing செய்ய வேண்டும். இவ்வாறாக Step by step செய்தால் எந்தக் குழந்தையும் பற்களைத் துலக்க Brushing செய்ய பிரச்சனை செய்ய மாட்டார்கள்.
• பல் துலக்கிய ( Teeth brushing) பிறகு பற்களில் மீதி இருக்கும் பற்களின் அழுக்கு (Dental Plaque) அறிய Disclosing tablets மற்றும் Chewing gum (எல்லா மருந்துக்கடையிலும் உள்ளது) வாங்கி குழந்தைகள் பல் துலக்குவதைக் கண்காணிக்கலாம்.
இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஆரோக்கியமான பற்களுடன் குழந்தைகளை வளர்த்தெடுக்கமுடியும். ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை!
டாக்டர் யூசுஃப் ஆதம்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1