தமிழகத்தில் கோடை மழை நீடிக்கும்!!
தமிழகத்தில் கோடை மழை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடல் மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, தமிழகம் முழுவதும் திங்கள் கிழமை நள்ளிரவில் இருந்து காலை வரை மழை பெய்தது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியதாவது:
மன்னார் வளைகுடா பகுதி யில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் மேற்கு நோக்கி நகர்ந்து கன்னியாகுமரி கடற்கரையில் நிலை கொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யும்.
Category: மாநில செய்தி
0 comments