வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்திய பாதுகாப்பு படை வீரரை காப்பாற்றிய பாக். வீரர்கள்!!
அப்போது அவர்கள் சென்ற படகின் என்ஜின் திடீரென பழுதானது. அதேசமயம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக படகு கவிழ்ந்தது. அதில் இருந்த 6 வீரர்களில் 5 பேர் படகில் இருந்து குதித்து தப்பித்துக்கொண்டனர்.
சத்யஷீல் யாதவ் என்ற வீரர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். பாகிஸ்தான் பகுதிக்குள் சென்ற அந்த வீரரை, பாகிஸ்தான் ரேஞ்சர் படை வீரர்கள் காப்பாற்றி விசாரித்தனர். தங்கள் எல்லைக்குள் இந்திய வீரர் பிடிபட்டதை பாகிஸ்தான் ரேஞ்சர் படை உறுதி செய்தது.
இதையடுத்து அவரை தங்களிடம் ஒப்படைப்பதற்காக எல்லையில் கொடி சந்திப்பு நடத்த வேண்டும் என இந்திய எல்லைப் பாதுகாப்பு படை அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான் பிடித்துள்ள வீரர் விரைவில் நம்மிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எல்லை பாதுகாப்புப்படை மூத்த அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Category: மாநில செய்தி
0 comments