சீன பட்டாசுக்கு எதிர்ப்பு : மக்களவையில் முதன் முறையாக தமிழில் பதில் அளித்த மத்திய அமைச்சர்..!
இன்று காலை அவை கூடியதும், தெலுங்கானா எம்பி - க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த அவையில் எம்பிக்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை எழுப்பினர். விருதுநகர் எம்பி ராதாகிருஷ்ணன் எழுந்து தமிழில் உரையாற்றினார். ' சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் தொழில் கடுமையாக பாதிப்புக்குள்ளாகிறது. சீனாவில் இருந்த பட்டாசு இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்த வேண்டும். சீனாவில் இருந்து கள்ளத்தனமாக , கடத்தப்பட்டு, துறைமுகம், மற்றும் நேபாளம் மூலம் இந்தியாவிற்குள் வருகிறது. இதனால் இந்திய வருமானம் பாதிக்கப்படும். இது தொடர்பாக மாண்புமிகு அம்மா, புரட்சித்தலைவி அவர்கள் பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும் கண்டுகொள்ளப்படவில்லை. உரிய நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் ?
சிவகாசியில் தொழில் பாதிக்கிறது. உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் சீன பட்டாசு தடை செய்ய வேண்டும். இது குறித்து அம்மா அனுப்பிய கடிதம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்பதை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் இவ்வாறு தமிழில் பேசினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நானும் தமிழில் பதில் அளிக்கிறேன் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஐகோர்ட்டில் , சுப்ரீம் கோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என தொடர்ந்து குரல் எழுந்து வரும் நிலையில், மக்களவையில் தமிழ் விவாதம் நடந்தது. இது வரை அவையில் எந்தவொரு மத்திய அமைச்சரும் தமிழில் பதில் அளித்தது இல்லை. முதன் முறையாக நிர்மலா சீத்தாராமன் தமிழில் பதில் அளித்து மகிழ்சசியை ஏற்படுத்தினார்.
Category: மாநில செய்தி
0 comments