பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் சார்பாக மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது!
பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் சார்பாக மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது!
பெரம்பலூரில் ராமகிருஷ்ணா கல்விநிறுவனங்கள் சார் பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, சமூக நல்லிணக்கவிழா நேற்று நடந்தது.
பெரம்பலூர் ராமகிருஷ்ணா கல்விநிறுவனங்களின் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும்நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கவிழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாளா ளர் சிவசுப்ரமணியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் விவேகானந்தன் வரவேற்றார். மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுல்தான் மொய்தீன், முன்னாள் அரிமாசங்க செயலாளர் ஒஜீர், அரும்பாவூர் இஹ்லாசூல் முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் தாஹிர்பாட்சா, பெரம்பலூர் எஸ்எஸ் எலக் ட்ரானிக்ஸ் உரிமையாளர் சுல்தான்இப்ராஹிம் ஆகியோர் இப்தார் நோன்பு குறித்து பேசினர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் ரஷீத் அஹமத், மாவட்ட தலைவர் மீராமொய்தீன், டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி முஹம்மது யூசுப், நூர் பள்ளிவாசல் தலைவர் பாட்சா மைதீன், செயலாளர் ஜவஹர் ஹலீம், மக்கா பள்ளி வாசல் தலைவர் முஹம்மது உஸ்மான் அன்வாரி, செயலாளர் பாஷாபாய், வழக்கறிஞர் முகமதுஇலியாஸ், வாலிகண்டபுரம் முத்தவல்லி ஷேக்பாஷா, அரும்பாவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஜமால் முஹம்மது ரஷாதி, விஸ்வக்குடி ஜும்மா பள்ளிவாசல் தலைவர் காதர் ஒலி,
வி.களத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் முகமதுஇஸ்மாயில், தலைமைஆசிரியர் கோமதி உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் சரவணன் நன்றி தெரிவித்தார்.
இதில் பெரம்பலூர் ,லப்பைக்குடிக்காடு,வி.களத்தூர் பகுதி முஸ்லீம் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.இது மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு!
புகைப்படம் V .ஜீவா.
Category: மாவட்ட செய்தி
0 comments