முஸஃபர் நகரில் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்!
லக்னோ: வீட்டு சாதனங்களை முகாமிற்கு கொண்டுவர பாதுகாப்பு அளிக்கக் கோரி முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடந்த ஆண்டு முஸஃபர் நகரில் கலவரது வெடித்தபோது எல்லாவற்றையும் விட்டு விட்டு முஹாத்பூர் ரெய்ஸிங் கிராமத்தில் இருந்து வெளியேறிய முஸ்லிம்கள் போலீஸ் பாதுகாப்பு கோரி காந்தலா-புதானா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.முஸஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள புதானா நகரத்தில் அமைந்துள்ள முகாமில் இவர்கள் தங்கியுள்ளனர்.
வீட்டுச் சாதனங்களை முகாமிற்கு கொண்டு வர விரும்பினாலும், சொந்த கிராமத்திற்கு சென்று அவற்றை எடுத்துவர கலவரத்தின் கொடிய நினைவுகள் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.எனினும், உபயோகிக்கவேண்டிய பொருட்களை எடுக்க விரும்பி, போலீஸ் பாதுகாப்பை கோரினால் அவர்கள் பாதுகாப்பு அளிக்கவும் தயாரில்லை.இதனைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Category: சமுதாய செய்தி
0 comments