பெரம்பலூரில் நாளை ரத்த தான முகாம்!
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் புதன்கிழமை (ஜூன் 25) நடைபெறுகிறது.
இதுகுறித்து சங்கத்தின் கெüரவச் செயலர் நா. ஜெயராமன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் நடைபெறும் ரத்ததான முகாமை, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தொடக்கி வைக்கிறார். காலை 8 மணி முதல் நடைபெறும் முகாமில் ரத்த தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் இந்திய மருத்துவ சங்கச் செயலர் கே. ராஜாமுகமத் (9444159359), இந்தியன் செஞ்சிலுவைச் சங்க கெüரவச் செயலர் நா. ஜெயராமன் (9443765563) ஆகியோரை தொடர்பு கொண்டு பெயரைப் பதியலாம் என்றார் அவர்.
Category: மாவட்ட செய்தி
0 comments