பெரம்பலூரில் ஆயத்த ஆடை, இலவச தொழிற்திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற அழைப்பு!
ஆயத்த ஆடை மற்றும் வடிவமைப்பு மையத்தில் இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறலாம் என்றார் பயிற்சி மைய நிர்வாகப் பொறுப்பாளர் இந்திராகவுரி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூரில் இந்திய அரசின் ஜவுளித் துறையின் கீழ் செயல்படும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் புதுதில்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் இனநிதி மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் மூலம் இலவசமாக திறன் வளர்ப்புப் பயிற்சிகள் அளிக்க உள்ளது.
குறிப்பாக, தையல் பயிற்சியான சுமார்ட் ஆபரேட்டர் பேசிக் மற்றும் அட்வான்ஸ், தையல் கலை, பூ வேலைப்பாடு பயிற்சி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும், அனைத்து வகுப்பினரும் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் இனநிதி மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் மூலம் அளிக்கப்படும் பயிற்சி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 15 வயது முதல் 50 வயதிற்குள்பட்ட, தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுக்கு அளிக்கப்படும்.
பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பம் பெற்று பதிய வேண்டும். இதையொட்டி, வெள்ளிக்கிழமை (ஜூன் 20) காலை 11 மணியளவில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வரும்போது மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 8 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
புதுதில்லியில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும் இலவசத் தையல் பயிற்சி அனைத்து வகுப்பு மக்களுக்கும் அளிக்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம், பூமாலை வணிக வளாகம், 2-ம் தளம், வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், பெரம்பலூர்- 621212 என்ற முகவரியில் ,04328- 278484, 8870309723 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Category: மாவட்ட செய்தி
0 comments