பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1½ லட்சத்தில் தையல் எந்திரங்கள் கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்!
பெரம்பலூர். ஜூன்.20.
பெரம்பலூரில், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தையல் எந்திரங்களை மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்.
தையல் எந்திரங்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் செயல்படும் ஆலத்தூர், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்களில் சேர்ந்து பயன் பெற்று வரும் 25 குழந்தைகளுக்கு அவர்களின் முதுகுப்பகுதி மற்றும் தலைப்பகுதியினை வலுப்படுத்த பயன்படும் வகையிலான ரூ.75 ஆயிரம் மதிப்பிலான நாற்காலிகளையும், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.5,500 வீதம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தையல் எந்திரங்கள்வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது மாற்றுத் திறனாளிகளுக்கு தையல் எந்திரங்கள் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிப்பது என்பது கவனமான செயலாகும். இங்கு வந்திருக்கும் தாய்மார்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை பகல் நேர பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளை அழைத்து செல்ல ஏதுவாக புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது போல் பகல் நேர பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள பயிற்றுநர்களால் வழங்கப்படும் பயிற்சியினை முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது குழந்தைகள் தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்ளும் அளவிற்கு தேர்ச்சி பெறும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் புதுவாழ்வு திட்ட அலுவலர் சுதாதேவி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் மனோகரன், அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் மாலதி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments