பாரமெடிக்கல் கவுன்சிலிங் எப்போது?
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் மற்றும் பி.எஸ்சி., ரேடியோலஜி மற்றும் இமேஜிங் உள்ளிட்ட பாராமெடிக்கல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 18ம் தேதி, காலை 10 மணிக்கு கவுன்சிலிங் தொடங்குகிறது. அன்றைய தினம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ராணுவ வீரர் பிள்ளைகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
ஆகஸ்ட் 19ம் தேதி முதல், இதரப் பிரிவினருக்கான கவுன்சிலங் தொடங்குகிறது. முதல் நாளில் கட்-ஆப் மதிப்பெண் 199.00 இலிருந்து துவங்குகிறது. தொடர்ச்சியாக 23ம் தேதி வரை நடைபெறும் கவுன்சிலிங், ஞாயிறு விடுமுறையைக் கடந்து, 25ம் தேதி திங்கட்கிழமை துவங்குகிறது.
இறுதியாக, 27ம் தேதி புதன்கிழமையுடன் றிறைவு பெறுகிறது. இறுதி கட்-ஆப் மதிப்பெண் 148.50. சென்னை, கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தின் ஆடிட்டோரியத்தில் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
இதுகுறித்து அனைத்து வழிகாட்டுதல்கள் மற்றும் விபரங்களை அறிய http://www.tnhealth.org/notification/August2014/CSCHEPMC1415.pdf என்ற வலைதளம் செல்க.
Category:
0 comments