பெரம்பலூரில் அமைக்கப்பட்டு வரும் அம்மா உணவக கட்டிட பணிகளை கலெக்டர் ஆய்வு!
அம்மா உணவகம்
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வகைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் படுத்தி வரும் திட்டமான “அம்மா உணவகம்” திட்டத் தின் கீழ் பெரம்பலூர் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம், அரசு தலைமை மருத்து வமனை வளாகம் ஆகிய இரண்டு இடங்களில் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ50 லட்சம் மதிப்பீட்டில் அமை க்கப்பட்டு வருகிறது.
இந்த உணவகங்களில் சமையல் கூடம், உணவு வழங்குமிடம், பொருட்கள் சேமிப்பு அறை, கைகழுவும் அறை, உணவு அருந்தும் அறை உள்ளிட்ட அறைகள் கொண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பொது மக்கள் வந்து செல்ல ஏதுவாக பேருந்து நிலையத்திலிருந்தும், பிரதான சாலையிலிருந்தும் உணவகத்திற்குள் செல்லும் வகையில் இரண்டு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளது.
புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் அம்மா உணவகத்திற்காக மேற்கூரை அமைக்கும் பணி, சமையலறை, உணவுப்பொருட்கள் வைக்கும் அறை, உணவுக்கூடம் ஆகிய வற்றை கலெக்டர் தரேஸ் அஹமது பார்வையிட்டு பணி களை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தி னார்.
நம்ம கழிப்பறை
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பெரம்பலூர் நகராட்சி 7 வது வார்டு ஆகிய 3 இடங்களில் இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் பொதுமக்க ளின் சுகாதாரத்தை பேணுகின்ற வகையில் நம்ம கழிப்பறை என்ற நவீன கழிப் பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த கழிப்பறைகள் ஆண்களுக்கு மூன்று, பெண்களுக்கு மூன்று என தனித்தனியே அமைக்கப்பட் டுள்ளன. இவற்றில் 2 கழிப்பறைகள் சாதாரண மாணவர்கள் பயன்படுத்தும் வகையி லும், 1 கழிப்பறை மாற்றுத் திறனாளிகள் பயன் படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டு வருகின்றன. 19–வது வார்டு பகுதியில் பெண்களுக்கு மட்டும் 3 எண்ணிக்கையிலான நம்ம கழிப்பறைகள் அமைக்கப் பட்டு வருகின்றன. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 26 லட்சம் ஆகும். இந்த நவீன கழிப்பறைகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.
இந்த ஆய்வுகளின்போது நகராட்சித்தலைவர் ரமேஷ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தாண்டவ மூர்த்தி உள்பட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments