மாணவ, மாணவியர்கள் அனைவரையும் வெற்றி பெறவைக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர்.தரேஸ் அஹமது பேச்சு!
கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது 10, 12 –ம் வகுப்பு நடைபெறும் அனைத்து பிரிவுகளுக்கும் சென்று மாணவ, மாணவியர்களின் வருகை பதிவேடுகளை பார்வையிட்டு அதிகம் விடுப்பு எடுக்கும் மாணவ, மாணவியர்களிடம் கார ணம் குறித்தும், அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள இந்த ஆண்டில் தேவையின்றி விடுப்பு எடுப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அறிவுரை கூறினார்.
ஆசிரியர்களுக்கு அறிவுரை
மாணவ, மாணவியர்கள் குறுபருவத்தேர்வில் எடுத் துள்ள மதிப்பெண்களைக் கேட்டு காலாண்டு தேர்வில் அனைத்து மாணவ, மாணவி யர்களும் நன்கு பயின்று நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என அறிவுறுத் தினார்.
மேலும் மாணவ, மாணவியர் கள் அனைவரையும் வெற்றி பெறவைக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்று ஆசிரியர்களைஅவர் கேட்டுக் கொண்டார்.
மாநிலத்தில் 4–வது இடம்
பின்னர் மாணவ, மாணவி யர்களிடம் கலெக்டர் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டம் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாகும். பள்ளியில் பயில உங்களின் பெற்றோர் அதிகம் பேருக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு மனிதனுக்கு கல்வியானது, அவன் உலகின் எந்த இடத்திற்கும் சென்று வாழ உதவும். அந்த சிறப்பு வாய்ந்த கல்வியில் 10, 12 –ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும். இந்த பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களும் வெற்றி பெற்றால்தான் பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு பெருமை. கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம், தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்கள் எடுத்த முயற் சியின் காரணமாக 12 –ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத் திலேயே 4 வது இடத்தை பெற்றுள்ளோம். இந்த ஆண்டு 10, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள் ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாண வியர்களும் வெற்றி பெற்று உயர்க்கல்வி பயில வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Category: மாவட்ட செய்தி
0 comments