பெரம்பலூர் அருகே ஆசிரியை பிரம்பால் அடித்ததில் 3ம் வகுப்பு மாணவன் காயம்!
பெரம்பலூர், ஆக. 4–பெரம்பலூர் மாவட்டம் ரங்கநாதபுரம் அருகே உள்ள வெள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் கோபி (வயரு 8) அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய கோபியின் உடலில் பிரம்பால் அடித்த காயங்கள் இருந்தன. இதை பார்த்த பெரியசாமி காயம் குறித்து கோபியிடம் விசாரித்தார். அப்போது சரியாக படிக்காததால் பள்ளியில் ஆசிரியை முத்துலட்சுமி பிரம்பால் அடித்ததாக அவன் கூறியுள்ளான்.
இதையடுத்து கோபியை பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு கலெக்டர் தரேஸ் அகமதுவிடம் பெரியசாமி ஆசிரியை குறித்து புகார் செய்தார். இது குறித்து விசாரிக்க பெரம்பலூர் போலீசருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் ஆசிரியை மீது தொடக்கக் கல்வித்துறை சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Category: மாவட்ட செய்தி
0 comments