பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 24 மணி நேரமும் புகார் கொடுக்கலாம் போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா தகவல்!
பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் மீது 24 மணி நேரமும் புகார் கொடுக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா பேசினார்.
விழிப்புணர்வு முகாம்
குன்னம் அருகே உள்ள வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக நலத்துறை மற்றும் காவல் துறையினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா தலைமை தாங்கி பேசியதாவது :-
பெண்கள் தங்கள் பிரச்சினைகளை தயக்கமின்றி சம்பந்தப்பட்ட துறையினர் களிடம் கூற முன் வரவேண்டும். அப்போது தான் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். பெரம்பலூர் காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறையினரை எப்போதும் அணுகலாம்.
24 மணி நேரமும் புகார் கொடுக்கலாம்
புகார் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மீது 24 மணி நேரமும் புகார் கொடுக்கலாம். குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி கடுமை யான நடவடிக்கை எடுக்கப் படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் பேச்சியம்மாள் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, வேப்பூர் பாரதிதாசன் பல்கலை உறுப்புக் கல்லூரி முதல்வர் மாலதி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேசு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஜோஸ்வா ராஜன் பள்ளி தலைமை யாசிரியர் கருப்பசாமி, ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர்கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
ஊர்வலம்
இதில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் குறும்படம் அரசின் செயல்திட்ட கண்காட்சி நடத்தப்பட்டது.
நிறைவாக மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளியில் தொடங் கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக பஸ் நிலையத்தை சென்று அடைந்தது.
Category: மாவட்ட செய்தி
0 comments