திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி 5 பேர் சாவு 3 பேர் காயம்!
திருச்சி, ஜூலை 10:
திருச்சி அருகே நேற்றுமுன்தினம் நள்ளிரவில் தறிகெட்டு ஓடிய கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியதில் 5 பேர் இறந்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த சத்திரம் கருப்பூர் வானுவ தெருவை சேர்ந்தவர் வேங்கிடசாமி (60). இவரது மைத்துனர் கண்ணன்(50). வேங்கிடசாமியின் சித்தப்பா மகன் மாரிச்சாமி(46). இவர்கள் கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்தனர்.
வேங்கிடசாமியின் தம்பி ராமமூர்த்தி தனது 2 மகள்களையும், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த நாகாபுரம் கல்ரெட்டிபட்டியில் அண்ணன், தம்பிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தலா ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைகளுக்கு நேற்று அங்குள்ள கருப்பசாமி கோயிலில் காதணி விழா நடைபெற இருந்தது.
இதற்காக வேங்கிடசாமி, மாரிச்சாமி, கண்ணன், இவரது மனைவி விஜயலட்சுமி, இவர்களது மகன் ராஜ்குமார்(14) ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு விளாத்திகுளத்துக்கு கண்ணனுக்கு சொந்தமான காரில் புறப்பட்டனர். கும்ப கோணம் அடுத்த இன்னாம்பூரை சேர்ந்த ரமேஷ்(45) காரை ஓட்டினார்.
நள்ளிரவு 11.45 மணியளவில் திருச்சி அடுத்த மணிகண்டம் அருகே உள்ள மேக்குடி பிரிவு சாலை பகுதியில் உள்ள ஒரு ரைஸ் மில் எதிரே சென்றபோது, டிரைவர் ரமேஷ் கண் அயர்ந்துவிட்ட�ர். இதனால், கார் தறிகெட்டு ஓடி சென்டர் மீடியன் மீது ஏறி சுமார் 15 அடி தூரம் சென்றது. இதில் சென்டர் மீடியனில் இருந்த எச்சரிக்கை விளக்கு (ரோடு கிராசிங் காட்டும் ஆரஞ்ச் கலர் லைட்) கம்பத்தை கார் சாய்த்தது.
சில வினாடிகளில் சென்டர் மீடியனிலிருந்து எதிர்புறத்தில் கீழே இறங்கி கார் சென்றது. காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் கூக்குரல் எழுப்பினர். அந்த சமயத்தில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி நாளிதழ் ஏற்றி வந்த மற்றொரு கார் மீது, இவர்கள் சென்ற கார் பயங்கரமாக மோதியது. இதில் 2 கார்களும் சேதமடைந்தன. கும்பகோணத் தில் இருந்து சென்ற காரில் இருந்த வேங்கிடசாமி, மாரிச்சாமி, கண்ணன், ராஜ்குமார் ஆகியோரும், மதுரையில் இருந்து வந்த காரில் இருந்த மதுரை விஎஸ்டி நகரை சேர்ந்த பிரதாப்(29) என்பவரும் அதே இடத்தில் இறந்தனர்.
கண்ணன் மனைவி விஜயலட்சுமி, டிரைவர் ரமேஷ், மதுரையிலிருந்து வந்த காரை ஓட்டி வந்த சொக்கலிங்கநகரை சேர்ந்த நாகராஜன் ஆகியோர் காயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்களும், திருச்சியிலிருந்து சென்ற தீயணை ப்பு படையினரும், காயமடை ந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விப த்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments