பெரம்பலூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.45.50லட்சம் மதிப்பிலான நலதிட்ட உத விகளை கலெக்டர் தரேஸ்அஹமது வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தரேஸ்அஹமது தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் இராஜன்துரை முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 382 மனுக்களை கலெக்டர் தரேஸ்அஹமதுவிடம் அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் தரேஸ்அஹமது, மனுக்களை சம்மந்தப்பட்ட துறைஅலுவலர்களிடம் கொடுத்து, குறித்த காலத்திற்குள் மனுக்களின்மீது தகுந்த நடவடிக்கை மேற் கொண்டு, மனுதாரருக்கு உரியபதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களின் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைக ளை உடனடியாக மேற்� காண்டு, தகுதியான அனை வருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் தரேஸ்அஹமது அறிவுறுத்தினார். இக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வடக்குமாதவி பால் உற்பத்தியாளர்கள் கூ ட்டுறவு சங்க உறுப்பினர் கள் 80ந பர்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கு தலா ரூ.45 ஆயிரம்வீதம் ரூ.36லட்சம் மதிப்பிலான காசோ லைகளை வழங்கினார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 9 நபர்களுக்கு தலா ரூ.3,600வீதம் ரூ34,200 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், ரூ.2600 மதிப்புள்ள சலவைப்பெட்டியினை 1நபருக்கு வழங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 8நபர்களுக்கு ரூ.3451வீதம், ரூ.27,608 மதிப்பிலான தையல் எந்திரங்களை வழங்கினார். ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை தாலுக்காக்களைச் சேர்ந்த பயனாளிகள் மற்றும் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 2நபர்களுக்கு ரூ.1.13லட்சம் மதிப்பிலான விசை களையெடுக்கும் கருவி ரூ.20,475 மானியத்திலும், ரூ.7.93லட்சம் மதிப்பில் சிறுதொழில் தொடங்குவதற்காக நான்கு சுயஉதவிக் குழுக்களுக்கு தவணை முறையில் திரும்ப செலுத்தக் கூடிய கடன்தொகையும், ரூ.6ஆயிரம் மதிப்புள்ள தையல் இயந்திரம் இரண்டு நபர்களுக்கு ரூ.5400 மானிய உதவி தொகையிலும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் முருகேஸ்வரி, பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அலுவலர் துரைசாமி, கனரா வங்கி உதவிப் பொது மேலா ளர் ராமசுவாமி, வேளாண் விரி வாக்க அலுவலர் விஜின்� தவ், வடக்கு மாதவி பால் உற்பத்தியாளர்கள் கூட் டுறவு சங்கத்தலைவர் பச்சமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கலெக்டர் வழங்கினார்
Category: மாவட்ட செய்தி
0 comments