Home �
� பத்தாம் வகுப்பு முதல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள் வரை மாதிரி வினாக்களை எஸ்.எம்.எஸ். மூலம் பெறும் வசதி அறிமுகம்
Unknown |
11:32 PM |
0
comments
பத்தாம் வகுப்பு முதல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள் வரை பல்வேறு விதமான தேர்வுகளுக்கான மாதிரி வினாக்களை எஸ்.எம்.எஸ். மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு, வங்கிப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான தேர்வுகளுக்கும் மாதிரி வினாக்களைப் பெறலாம். -டெக்ஸ்ட்வெப்- நிறுவனம் சார்பில் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.
இதற்காக 51115 என்ற எண்ணுக்கு என்ன விதமான தேர்வுக்கான மாதிரி வினா வேண்டும் என்பதை எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும். அதன்பிறகு, மாதிரி வினா எஸ்.எம்.எஸ்ஸில் வரும். அந்த வினாவுக்கு பதிலளித்தவுடன், நாம் விரும்பினால், அடுத்தக் கேள்வியும் எஸ்.எம்.எஸ்ஸில் வரும் என டெக்ஸ்ட்வெப் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஸ்ரீவித்யா ராமநாதன் கூறினார்.
பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு ஃ10க்ஷர்ஹழ்க் எனவும், பிளஸ் 2 வகுப்புத் தேர்வுக்கு ஃ12க்ஷர்ஹழ்க் எனவும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு ஃன்ல்ள்ஸ்ரீ எனவும் டைப் செய்து 51115 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.
எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். குறுகிய கால சிறப்புத் திட்டங்களிலும் மாணவர்கள் சேரலாம். மொத்தம் 15 நாள்களுக்கு ரூ.15 என்ற கட்டண விகிதங்களில் இந்தத் திட்டங்கள் உள்ளன. இதில் சேருவோர் அந்த குறிப்பிட்ட நாள்களில் எத்தனை எஸ்.எம்.எஸ். வேண்டுமானாலும் கட்டணமின்றி அனுப்பலாம் என ஸ்ரீவித்யா ராமநாதன் கூறினார்.
ஏர்டெல், ஐடியா, வோடஃபோன், டாடா ஆகிய நிறுவனங்களின் செல்போன் இணைப்பு பெற்றவர்கள் மட்டுமே இந்த எஸ்.எம்.எஸ். சேவையைப் பெற முடியும். மேலும் பல நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் சேரும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
தேர்வுகளுக்கான மாதிரி வினாக்களோடு பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் 5 ஆயிரத்து 700 விதமான சேவைகளையும் எஸ்.எம்.எஸ். மூலம் பெறலாம். கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கவும், நகைச்சுவைகளைப் பரிமாறிக்கொள்ளவுமே இந்த எஸ்.எம்.எஸ். சேவையை இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர்.
Category:
About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!
0 comments