அபுதாபி விமான நிலையத்தில் பயணிகளுக்குத் உறங்கி ஓய்வெடுக்க வசதி!
விமான நிலையங்களில் தமது விமானத்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்குச் சரியாக ஓய்வெடுப்பதற்கோ, சில நாட்டு விமான நிலையங்களில் சரியாக, சாய்ந்து அமர்ந்திருப்பதற்கான வசதிகூட இல்லாமல் இருக்கும் சூழலில் அபுதாபி விமான நிலையத்தில் உலகிலேயே முதன் முறையாக பயணிகளுக்கு உறங்கி ஓய்வெடுப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வசதி குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிடும்போது, "முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, மாதிரி சோதனைகளனைத்தும் முடிந்துவிட்ட இப்புதிய வசதிக்குப் பயணிகளிடையே பெருத்த வரவேற்பு உள்ளது. இன்று முதல் செயல்பட ஆரம்பிக்கும் இவ்வசதியினை எல்லா பயணிகளும் அனுபவிக்கலாம்" என்று கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள விமானநிலையங்களிலேயே மிகச் சிறந்த விமானநிலையத்திற்கான பரிந்துரையில் அபுதாபி விமான நிலையமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு மணி நேரத்துக்கு 12.25 டாலர் செலவழிக்க நீங்கள் தயாரா? இணைய வசதி, மொபைல் சார்ஜ் முதலான வசதிகளுடன் துவங்கப்பட்டுள்ள இந்த ஸ்லீப் செல் வசதியினை நீங்களும் அனுபவிக்கலாம்!
Category: அபுதாபி
0 comments