.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபாயில் வேலைவாய்ப்பினை இழந்துவரும் இந்தியர்கள் !

Unknown | 2:00 AM | 0 comments


2014 கணக்கின் படி புதிதாக வேலை அமருவதில் இந்தியர்களை விட பிலிப்பைன்ஸ் நாட்டினர் அதிக அளவு முன்னேறி உள்ளனர். இதற்க்கு அடிப்படையான காரணம் இந்தியர்கள் சக இந்தியர்களுக்கு உதவாமை, வேலை வாய்ப்பினை பற்றின அறியாமை, மொழி, இனம், மதத்தின் அடிப்படியில் பிரிந்து கிடப்பது மற்றும் பல..

ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டினரோ மிகவும் ஒற்றுமையாக, மிகுந்த கவனத்துதடன் செயல் படுகின்றனர். எப்படி எனில், ஒருவர் வேலை தேடி வந்துள்ளார் என்றால் அவர்களுடைய தேவாலயத்தில் அறிவிப்பார்கள், மற்றும் அவர்களுக்கு என்று பல இலவச நாளிதழ்களும், பல இணையதளங்களும் இயங்கி வருகின்றது.


அவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் நம் இந்தியர்களின் சம்பள அளவு குறைகின்றது, வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை, வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

ஒரு காலத்தில் துபாய்க்கு போனாலே வேலை கிடைக்கும் என்று இருந்தது, ஆனால் இப்போதோ விசிடிங்கில் வந்தும் பல கம்பெனிகளுக்கு ஏறி எறங்கியும் பிரயஜோனம் இல்லை. (கண்டிப்பாக இதை வாசிக்கும் போதே உங்கள் அண்ணனோ, தம்பியோ அல்லது நண்பர்களோ விசிடிங்கில் வந்தும் வேலை இல்லாமல் போனது நியாபகதுக்கு வரும்).

உதாரணம்: வேலை தேடி நாம் செல்லும் ஒவ்வொரு அலுவலகங்களிலும் பிலிப்பைன்ஸ் நாட்டினரே வரவேற்பாளர் ஆக இருக்கின்றனர். இந்தியர்களோ, பாகிஸ்தானியரோ அல்லது நம் அண்டை நாட்டினர் எவர் சென்றாலும் வேலை இல்லை என்று சொல்வது மற்றும் அல்லாமல் அவர்கள் கொடுக்கும் விண்ணப்பங்களை மேல் அதிகாரிகளுக்கு அனுப்பாமல் கிழித்து போட்டு விடுகின்றனர்( நான் நேரில் பார்த்தது), இதுவே அவர்கள் நாட்டினர் வந்தாலோ உடனே மேல் அதிகாரியை பார்பதற்க்கு வழிவகுப்பார்கள்,

அது மற்றும் அல்லாமல் மேலதிகாரிகளை (இந்தியர்கள் தான் அதிகம்) கையில் போட்டுக்கொண்டு(Boyfriend) அவர்கள் நாட்டினர்களுக்கு அதிக வேலை வாய்ப்பினை உண்டுபண்ணுகிறார்கள். மெட்ரோவிலோ அல்லது பொது இடத்திலோ இந்தியர்கள் பக்கத்தில் வந்தால் மூக்கை பிடித்து கொண்டு துர்நாற்றம் என்கின்றனர் (இதை மெட்ரோவில் போகும் பல பேர் அனுபவித்து இருப்பீர்கள்).

இந்த நிலைமை இப்படியே போனது என்றால் இன்னும் 2-3 ஆண்டுகளில் இந்தியர்கள் துபாயில் வேலை எடுப்பதே கஷ்டம் என்ற நிலை வந்துவிடும் மற்றும் அவர்களுக்கு கீழே தான் வேலை செய்ய வேண்டிய நிலைமையும் வந்துவிடும்.... எச்சரிக்கை !! எச்சரிக்கை !!





Thanks : துபாய் வாழ் தமிழன்(இந்தியன்)

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1