.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம்!

Unknown | 5:41 PM | 0 comments




 



பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெற பதிவு செய்து, அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெற புகைப்படம், கைரேகை, விழித்திரை பதிவு செய்வதற்கான 3-ம் கட்ட முகாம் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் 2012- 2013-ம் ஆண்டுகளில் ஆதார் அட்டை பெற பதிவு செய்து கொண்டவர்களில், இதுவரை அடையாள அட்டை கிடைக்காத நபர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஜூலை 3-ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற உள்ளன. அதன்படி, வேப்பந்தட்டை வட்டத்தில் கிராமம் தோறும் சிறப்பு முகாம்கள் முதல் கட்டமாக நடைபெற உள்ளன. முகாம் நடைபெறும் கிராமங்களின் விவரம், கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டுகளில் குடியிருக்கும் பொதுமக்கள், தங்களது தேசிய அடையாள அட்டை பதிவை பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் அட்டை பதிவு மையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம். இந்த முகாமில் 2012- 2013-ம் ஆண்டுகளில் ஆதார் அட்டை பெற பதிவு செய்து கொண்டவர்களில், இதுவரை அடையாள அட்டை கிடைக்காத நபர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

முகாமில் கலந்து கொள்வதற்கு முன், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் உள்ள பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்து, அந்த பட்டியலில் உள்ள பெயரின் வரிசை எண்ணை பெற்று வர வேண்டும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் முகாமுக்கு வர வேண்டும்.

ஆதார் அட்டைகளில் உள்ள பிழைகள் மற்றும் மாற்றங்களை பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மையத்தில் திருத்தம் செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1