.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இஸ்லாமியப் பொது அறிவு-கேள்வி பதில்

Unknown | 3:37 PM | 16 comments


1 . ஹிஜ்ரத் என்றால் என்ன?

வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.
2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்? 
ஹபஸா (அபிசீனியா)
3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?
முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து.
4 . ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன?
1. முதல் மாதம் முஹர்ரம்,
2. இரண்டாம் மாதம் ஸபர்,
3. முன்றாம் மாதம் ரபிவுல் அவ்வல்,
4, நான்காம் மாதம் ரபிவுல் ஆகிர்,
5, ஐந்தாம் மாதம் ஜமாஅத்துல் அவ்வல்,
6. ஆறாம் மாதம் ஜமாஅத்துல் ஆகிர்,
7. ஏழாம் மாதம் ரஜப்,
8. எட்டாம் மாதம் ஷாஃபான்,
9. ஒன்பதாம் மாதம் ரமழான்,
10. பத்தாம் மாதம் ஷவ்வால்,
11. பதினோன்றாம் மாதம் துல் கஅதா,
12. பனிரெண்டாம் மாதம் துல் ஹஜ்.
5. முஸ்லிம்களின் 3 புனித நகரங்கள் எவை?
1. புனித கஃபா ஆலயம் உள்ள மக்கா.
2. மஸ்ஜித் நபவீ இருக்கும் மதீனா.
3. மஸ்ஜித் அக்ஸா இருக்கும் பாலஸ்தீனம்.
6. உம்முல் குர்ஆன் எது? 
ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)
7. ரூஹூல் அமீன் என்பது யாருடைய பெயர்?
வானவர் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்களுடைய பெயர்
8. நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?
23 ஆண்டுகள்
9. குர்ஆன் மக்காவில் எத்தனை ஆண்டுகள், மதீனாவில் ஆண்டுகள் இறங்கியது?
மக்காவில் : 13 ஆண்டுகள் , மதீனாவில் : 10 ஆண்டுகள்
10 . குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு எத்தனை நன்மைகள் உண்டு?
குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு. (ரமழானில் 70-நன்மைகள்-).
11. திருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?
அப்துல்ஹமீது பாகவி
12. ஸஜ்தா இல்லாத தொழுகை யாது?
ஜனாஸா தொழுகை
13. ஆரம்பத்தில் திருக்குர் ஆனை எதில் பதிவு செய்தனர் ?
எலும்பு, தோல், மரப்பட்டைகள். மேலும் நபிகளாரும், ஸஹாபாப் பெருமக்களும் மனனம் செய்து கொண்டனர்.
14 . திருக்குர்ஆனின் முதல் வசனம் எது ?
'இக்ரஹ் பிஸ்மிரப்பிக்கல்லதி ஹலக்' (அல் குர்ஆன் 96 : 1)
15. நபி (ஸல் ) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய இறை வசனம் எது?
'அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து' என துவங்கும் வசனமாகும்(5:3)
16. உலகின் இறுதி நபி யார் ?
உலகின் இறுதிநபி முஹம்மத்(ஸல்) அவர்கள்
17. மைக்கேல் ஹார்ட் எழுதிய The 100 என்ற ஆய்வு நூலில், எல்லாருக்கும் முதன்மையாக, தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
18. குர் ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபி யார் ?
நபி முஸா (அலை)
19. இறுதி நாளின் அடையாளமாக, வானிலிருந்து இறங்கிவரக்கூடிய நபி யார் ?
நபி ஈஸா (அலை)
20. திருக் குர் ஆனில் பெயர் கூறப் பட்ட ஒரே பெண்மணி யார் ?
நபி ஈஸா(அலை) அவர்களின் தாய் மரியம் (அலை).
21. திருக் குர் ஆனில் ஒரு இடத்தில் மட்டும் வரும் நபித் தோழரின் பெயர் என்ன ?
ஜைது (ரலி) ( அல் குர்ஆன் 33 : 37)
22. ஹதீஸ் கிரந்தங்கள் சிலவற்றின் பெயர் கூறு?
புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி, முஸ்னத் அஹ்மத், நஸயீ
23. எந்த கலீஃபாவின் ஆட்சியில், ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?
கலிபா உஸ்மான் (ரலி)
24. பிலால்(ரலி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்துமீட்டவர் யார் ?
அபு பக்கர் (ரலி) அவர்கள்
25. முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ? 
அலி (ரலி) அவர்கள்.
26. இஸ்லாமிய வரலாற்றில் முதல் பெண் உயிர் தியாகியின் பெயர் என்ன ?
அன்னை சுமையா (ரலி) அவர்கள்.
27. இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தொழர் யார் ?
காலித் பின் வலீத்(ரலி)
28. தாங்கள் வழி நடத்திச் சென்ற அனைத்து போர்களிலும், வெற்றி ஈட்டிய நபித் தொழர் யார் ?
காலித் பின் வலீத் (ரலி)
29. வியாபாரிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேள்விப் பட்டு இஸ்லாத்தை ஏற்ற கேரள மன்னர் யார் ?
மன்னர் சேரமான் பெருமாள்-அப்துர் ரஹ்மான்
30. நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ?
லவ்ஹூல் மஹ்ஃபுள்
31. மனிதனின் வலப்புறமும், இடப்புறமும் இருந்து நன்மை, தீமைகளை எடுத் தெழுதும் வானவர்கள் பெயர் என்ன ?
கிராமன் - காத்திபீன்
32. ஒரு நற்செயலை செய்தால் எத்தனை மடங்கு நன்மைஉண்டு ?
10 மடங்கு நன்மை உண்டு.
33. மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன ?
உலகின் ஆயிரம் ஆண்டுகள் (காண்க அல்குர்ஆன் 22 : 47)
34. அல்லாஹ் - அளவற்ற அருளாளன்
35. திருக்குர்ஆன் - இறைவேதம்
36. குர்ஆனின் முதல் வசனம் இறங்கிய இடம்?
ஹிரா குகை
37 அல்லாஹ்வுவை வணங்குவதற்காகமுதலில் ஆதம் (அலை)அவர்களால் கட்டப்பட்டு பிறகு இப்ராஹீம் (அலை)அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாயில் யாது ?
மக்காவிலுள்ள கஃபா
38. கலிபா என்பவர் யார்?
இஸ்லாமிய ஆட்சியாளர்
39. ஸஹாபாக்கள் எனப்படுவோர் யாவர்?
நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்
40. ஈத் அல் பித்ர் என்றால் என்ன?
புனித ரமழான் மதத்தின் இறுதியில் வரும் பெருநாள்
41. ஈத் அல் அத்ஹா என்றால் என்ன?
தியாகத்திருநாள் - ஹஜ்ஜூப் பெருநாள்
42. சுன்னா என்றால் என்ன?
நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறை சொல், செயல், அங்கிகாரங்களுக்கு சுன்னா எனப்படும்.
43. ஸலாத் என்றால் என்ன?
தொழுகை
44. ஸஜ்தா என்றால் என்ன?
தொழும் போது தலையை குனிந்து நெற்றியை பதிக்கும் முறை
45. சூரா என்றால் என்ன?
குர்ஆனின் பாகம்
46. ஷிர்க் என்றால் என்ன?
அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்
47. ஸவ்ம் என்றால் என்ன?
நோன்பு
48. வித்ர் என்றால் என்ன?
இரவில் தூங்குவதற்கு முன் இறுதியாகத் தொழும் தொழுகை
49. வுளு என்றால் என்ன?
தொழுகைக்கு முன் நீரால் முகாம் கை கால் போன்ற உடல் உறுப்புகளை சுத்தம் செய்வது
50. தக்வா என்றால் என்ன?
இறையச்சம்
51. தவ்பா என்றால் என்ன?
பாவ மன்னிப்பு
52. புர்கான் என்றால் என்ன?
திருக்குர்ஆனின் மற்றுமொரு பெயர் - பிரித்தரிவித்தல் என்று பொருள்.
53. தீன் என்றால் என்ன?
அல்லாஹ்வின் மார்க்கம்
54. தூஆ என்றால் என்ன?
இறைவனிடம் உதவி கேட்டு பிராத்தனை புரிவது
55. பாங்கு என்றால் என்ன?
தொழுகைக்கான அழைப்பு

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

16 comments:

  1. 19 வினவின் ஆதாரம்?

    ReplyDelete
    Replies
    1. 61. "அவர் (ஈஸா) அந்த நேரத்தின்1 அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி'' (எனக் கூறுவீராக.)

      திருக்குர்ஆன் 43:61

      Delete
  2. நபியவர்களிடம் பைஅத் செய்த அன்சாரிப் பெண்மணி யார்?

    ReplyDelete
    Replies
    1. நபியவர்களிடம் பைஅத் செய்த அன்சாரிப் பெண்
      யார்



      யார்

      Delete
  3. நபி (ஸல்) அவர்களிடம் என் கையால் உங்களுக்கு மந்திரித்தால் ஷைத்தானுடைய சேட்டைகளிலிருந்து சுகம் கிடைக்கலாம் என்று கூறியபின் நபியவர்களது பேச்சை கேட்டு இஸ்லாத்தை ஏற்றவர் ?*✍️

    ReplyDelete
  4. நபி (ஸல்) அவர்களிடம் என் கையால் உங்களுக்கு மந்திரித்தால் ஷைத்தானுடைய சேட்டைகளிலிருந்து சுகம் கிடைக்கலாம் என்று கூறியபின் நபியவர்களது பேச்சை கேட்டு இஸ்லாத்தை ஏற்றவர் ?*✍️

    ReplyDelete
  5. எங்கள் நாயகம் கண்மனி முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அண்ணவர்களை முன்வைத்து அல்லாஹ்விடத்தில் முதன் முதலாக துஆ கேட்ட நபியின் பெயர் என்ன ?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் ஸஹீஹான ஆதாரம் இருக்க???

      Delete
  6. ஸூரதுல் பைய்யினஹ் (سورة بيينة) (soorathul baiyenah )என்ற ஸூராஹ்வை அல்லஹ் ஒரு சஹாபிக்கு ஓதிக்காட்டும் படி நபி (ஸல்) அவர்களுக்கு சொன்னான் அந்த ஸஹாபியின் பெயர் என்ன?

    ReplyDelete
  7. Aadam nabi entha naalil Allah padaiththaan

    ReplyDelete
  8. ஸஈத் முஹம்மத் ஷஹ்பான் ஷியாம் எப்போது ஷஹீதாக்கப்பட்டார்??

    ReplyDelete
  9. யாரெல்லாம் அல்லாஹ்விற்கு சுஜுத் செய்ததாக குர்ஆனில் கூறப்படுகிறது?*

    ReplyDelete

ads2

Catwidget2

Catwidget1