இடிந்து விழுந்த சென்னை புதிய விமான நிலைய மேற்கூரை!
சென்னை: சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு 4 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட உள்நாட்டு முனையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைக்காக தனி முனையம் கட்டப்பட்டு நான்கு மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. இதன் மேல் தளத்தில் உள்நாட்டு விமான புறப்பாடு பகுதியில் பயணிகள் சோதனை முடிந்து விமானத்துக்குச் செல்லும் பாதையில் 10-க்கு 10 அளவுள்ள மேற்கூரைகள் நேற்று நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது.
மேற்கூரை இடிந்து விழுந்த நேரத்தில் உள்நாட்டு விமான சேவைகள் எதுவும் இல்லாமல் இருந்ததால் அப்பகுதியில் பயணிகள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது. இச்சம்பவத்தில் யாரும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

எனினும், புதிதாக கட்டப்பட்டு வெறும் நான்கு மாதங்களே ஆன கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் விமான நிலைய பணியாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். கட்டிடத்தின் பிற பகுதிகளையும் சோதனை செய்ய தற்போது அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

Category: மாநில செய்தி
0 comments