வேப்பந்தட்டையில் இலவச கண்சிகிச்சை முகாம் வரும் 10,11 தேதிகளில் நடக்கிறது என கலெக்டர் தரேஸ்அகமது தெரிவித்துள்ளார்!

பெரம்பலூர், செப்.7:
வேப்பந்தட்டையில் இலவச கண்சிகிச்சை முகாம் வரும் 10,11 தேதிகளில் நடக்கிறது என கலெக்டர் தரேஸ்அகமது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கத்தின் சார்பாக வரும் 10 மற்றும் 11ம்தேதிகளில் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 1மணிவரை மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்றத்தலைவர், கிராம நிர்வாகஅலுவலர், பஞ்சாயத்து உதவியாளர் ஆகியோரை அணுகி முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமிற்கு வரும் போது, புகைப்படத்துடன்கூடிய அடையாளஅட்டையின் நகல் ஏதேனும்ஒன்றினை கண்டிப்பாக எடுத்துவர வேண்டும்.
முகாமில் கண்புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் அன்றே உள்விழிலென்சு பொருத்துவதற்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்படுவர். கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மருந்துகள், மாத்திரைகள் உணவு மற்றும் போக்குவரத்துவசதி மற்றும் உள்விழி லென்ஸ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். முகாமில் அறுவை சிகிச்சை செய்து திரும்பியவர்களுக்கு ஒருமாதம் கழித்து முகாம் நடைபெற்ற இடத்திலேயே மதுரை அரவிந்த் கண்மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை வேப்பந்தட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் தவறாமல் பயன்படுத்தி பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி
0 comments