மீண்டும் வி.களத்தூர் கல்லாற்றில் மணல் திருட்டு! 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்!
பெரம்பலூர், செப். 7:
வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூர் கிராமத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட 8 மாட்டு வண்டிகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூர் கிராமத்தில் எஸ்எஸ்ஐ அண்ணாதுரை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கல்லாற்றில் அதே ஊரை சேர்ந்த ரமேஷ்(29), சுப்ரமணி(40), நல்லதம்பி(39), மாரிமுத்து(38), தனபால்(39), ராமையா(40), முத்துசாமி(41), முத்துசாமி(42) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான மாட்டு வண்டியில் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து 8 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளனர். ஒரே நேரத்தில் 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வி.களத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் கல்லாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினகரன்

Category: உள்ளுர் செய்தி
0 comments