துபாயில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் ரூ.1½ கோடி தங்கம் கடத்தல்!

ஆலந்தூர்,
துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.1½ கோடி மதிப்புள்ள தங்கத்தை நூதன முறையில் கடத்தி வந்த 2 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
துபாய் விமானம்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்து நேற்று காலை சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது கேரள மாநிலம் கோழிக்கோடுவைச் சேர்ந்த முஸ்தபா(வயது 33) என்பவர் அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்தார்.
3 கிலோ தங்கம்
அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவரிடம் ஒரு பழைய டி.வி. இருந்தது. அதன்மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதை பிரித்து பார்த்தனர். அப்போது டி.வி.யின் உள்ளே இருந்த ‘டிரான்ஸ்பார்மர்’ கருவியை பிரித்து பார்த்த போது அதில் தங்க தகடுகளை மறைத்து வைத்து நூதன முறையில் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
3 கிலோ 200 கிராம் எடை கொண்ட அந்த தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அதை கடத்தி வந்த முஸ்தபாவை கைது செய்தனர். கைப்பற்றிய தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.
மற்றொரு விமானம்
இதேபோல நேற்று காலை துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அதில் வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், 1½ கிலோ எடை கொண்ட தங்கத்தை அழகு சாதன பொருட்களின் இடையே மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
ரூ.50 லட்சம் மதிப்பு உள்ள அந்த தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள் அதை கடத்தி வந்த நபரையும் கைது செய்தனர்.
துபாயில் இருந்து வந்த 2 விமானங்களில் இருந்தும் ரூ.1½ கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Category: மாநில செய்தி
0 comments