பெரம்பலூர் அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், திருவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த அய்யாவு பானுமதி தம்பதிகளின் மகன் பாலசுப்ரமணியன், 26, என்பவருக்கும், வேப்பூர் யூனியன் காரைப்பாடி கிராமத்தை சேர்ந்த,16 வயது சிறுமிக்கும், நேற்று திருவளக்குறிச்சியில் திருமணம் நடைபெற இருந்தது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ்அஹமது உத்தரவின்படி, வருவாய் துறை, சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் பாடாலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இத்திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்
Category: மாவட்ட செய்தி
0 comments