சென்னை அருகே 11 மாடி கட்டிடம் சரிந்த பயங்கரம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17-ஆக உயர்வு!
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் சனிக்கிழமை 11 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டது. புதிதாக கட்டப்பட்டு வந்த 'ட்ரஸ்ட் ஹைட்ஸ்' என்ற அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து தரைமட்டம் ஆனது. 120-க்கும் மேற்பட்டோர் இடுபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்கள் வெளி மாநில மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் ஆவர். சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளது. இடுபாடுகளில் சிக்கிய 22 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Category: மாநில செய்தி
0 comments