ஐக்கிய அரபு எமிரேட்சின் தாராள குணம்.!

நோயற்ற ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும் பல விடயங்களில் நாம் அருந்துகின்ற தண்ணீரும் உள்ளடக்கம்.
சுத்தமான தண்ணீரை நாள்தோறும் பருகுவதன்
மூலம் பல நன்மைகளை நாம்
அடைந்து கொள்ள முடியும்.
சுத்தமான குடிநீர் கிடைக்காததன் மூலம் உருவாகின்ற நோய்களினால் வருடம்தோறும்
உலக அளவில் 3.4 மில்லியன் மக்கள் மரணமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றது.
இதில் பெரும்பாலும் ஆபிரிக்க
நாடுகளை சேர்ந்த மக்களே இருக்கிறார்கள்.
உலகம் முழுவதிலுமுள்ள
மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் 1981ம் ஆண்டு லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அரச சார்பற்ற நிறுவனம்தான் WaterAid.
27 நாடுகளில் இயங்கி வருகின்ற இந்த தன்னார்வ தொண்டு அமைப்பு இதுவரையிலும்
ஏராளமான நாடுகளில் சுத்தமான குடிநீர் கிடைக்க வழி வகை செய்து கொடுத்துள்ளது.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு ஐக்கிய
அரபு எமிரேட்ஸ் 60.3 மில்லியன்
திர்ஹம்களை அன்பளிப்பாக
கொடுத்துள்ளது. இந்த
தொகையின் மூலம் சுத்தமான குடிநீர் கிடைக்காத பிரதேசங்களில் வாழ்கின்ற 2.4
மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீரை தங்களால் வழங்க முடியும் என WaterAid
நம்பிக்கை தெரிவித்துள்ளது.
60 நாடுகளில் வசிக்கின்ற 5 மில்லியன் மக்களுக்கான சுத்தமான குடிநீரை வழங்குவதுதான் எமது இலக்கு என ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரதம மந்திரியும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக்
முஹம்மத் பின்த் ரஷீத் அல் மக்தூம் அவர்கள்
தெரிவித்துள்ளார்கள்.
சேகரிக்கபட்ட இந்த நிதியை கொண்டு முதல் கட்டமாக
தெரிவு செய்யப்பட்ட பாகிஸ்தான், இந்தியா, நைஜர், சோமாலியா, கானா, சூடான், இந்தோனேசியா, டோகோ, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகளில்
கிணறுகளை கட்டும் பணியை எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட் ஆரம்பித்துள்ளது.
இதில் ஆப்கானிஸ்தானில் மட்டும்
அதிகபட்சமாக 73 கிணறுகளும் ஈராக்கின் குர்திஷ்தான் பிரதேசத்தில் குறைந்த பட்சமாக 4
கிணறுகளும் உள்ளடங்குகின்றன. இந்த
பணிகள் யாவும் 15 நாட்களுக்குள்
முடிக்கப்பட்டு கிணறுகள் யாவும் மக்களின் பாவனைக்காக அவர்களிடம் ஒப்படைக்கப்படவிருக்கின்றது.
60.3 மில்லியன் திர்ஹம்களையும்
அன்பளிப்பு செய்த பல்வேறு நிறுவனங்களுக்கும் பிரதம
மந்திரி நன்றிகளையும் பாராட்டுக்களையும்
தெரிவித்துள்ளார்.
கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உதவி செய்வதில் ஐக்கிய
அரபு எமிரேட்சும் இங்கு வசிக்கின்ற வெளிநாட்டு மக்களும் முன் நிற்பதில்
தாம் பெருமையடைவதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
நக்கில் ப்ரொஜெக்ட், எமிரேட்ஸ்
எயார்லைன்ஸ், வஸ்ல் ப்ரோபர்டி ஆகியன தலா 5 மில்லியன்
திர்ஹம்களை அன்பளிப்பு செய்துள்ளது. இது 600,000 மக்களின் குடிநீர் தேவைக்காக
உபயோகிக்கப்படவுள்ளது.
ஜபல்அலி சுதந்திர வர்த்தக வலயம் 2மில்லியன் திர்ஹம்களை வழங்கி 80,000
மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
செய்கா அலியா பின்த் கலீபா,
லூலு ஹைப்பர் மார்க்கட் ஆகியன தலா 1 மில்லியன் திர்ஹம்களை வழங்கி 80,000 மக்களின் குடிநீர்
தேவையை பூர்த்தி செய்கிறார்கள்.
இன்வெஸ்ட்மென்ட் கோப்ரேஷன் ஒப் துபாய் 2,4000 மக்களின் குடிநீர்
தேவையை பூர்த்தி செய்வதற்காக வேண்டி 6 மில்லியன் திர்ஹம்ளை அன்பளிப்பு செய்துள்ளது.
20,000 மக்களின் குடிநீர் தேவைக்காக த லேண்ட்
டிப்பார்ட்மென்ட் 5 லட்சம்
திர்ஹம்களையும் 50 கிணறுகளை அமைப்பதற்காக யூனியன் கோப் 250,000 திர்ஹம்களையும்
அன்பளிப்பு செய்துள்ளதையும்
நினைவு கூர்ந்து பிரதம மந்திரியும், WaterAid
நிறுவனத்தினரும் நன்றிகளையும்
பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
-Razana Manaf
Category: வளைகுட செய்தி
0 comments