சென்னையில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்வு!
சென்னை: சென்னையில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை, 26 ஆக உயர்ந்தது. இவர்களில், மூன்று பேர், அடையாளம் தெரியவில்லை. காயமடைந்த, 23 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டடம் இடிந்து விழுந்த பகுதி முழுவதும், துர்நாற்றம் வீசுவதால், இடிபாடுகளில் சிக்கியவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. மீட்பு பணி, தொடர்ந்து நடந்து வருகிறது





Category: மாநில செய்தி
0 comments