ஈராக்கில் இருந்து 94 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்!…!
பாக்தாத்:-ஈராக்கில் இருதரப்பினருக்கும் இடையில் உச்சகட்ட மோதல் நடைபெற்று வரும் நஜப். கர்பலா, பாக்தாத் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற்றி, தாய்நாட்டுக்கு அனுப்ப ஈராக்கில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்தது.
இதனையடுத்து, நஜப் பகுதியில் இருந்து 60 பேரும், கர்பலாவில் இருந்து 30 பேரும், பாக்தாத்தில் இருந்து 4 பேரும் இன்று இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். மேற்கண்ட பகுதிகளிலும் பஸ்ரா நகரிலும் வசிக்கும் மேலும் சில இந்தியர்களை தூதரக அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்து, அவர்களை உடனடியாக தாய்நாட்டுக்கு திரும்புமாறு கூறி வருகின்றனர்.
இந்த வார இறுதிக்குள் மேலும் 600 இந்தியர்களை பத்திரமாக அனுப்பும் முயற்சியில் அங்குள்ள தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் நிலை என்ன ஆயிற்று? என்ற கேள்விக்கு பதிலளித்த தூதரக அதிகாரிகள், அவர்களை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
Category: வளைகுட செய்தி
0 comments