நடப்பு ஆண்டில் 30 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.150 கோடி கடன் வழங்க இலக்கு பெரம்பலூர் கலெக்டர் பேச்சு!

நடப்பு ஆண்டில் 30 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.150 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக பெரம்ப லூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட தொடக்க வேளாண்மை மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:
கடன் முகாம்கள்
விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பயிர்க் கடன் முகாம்கள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோலவே இந்த ஆண்டிற்கான பயிர்க்கடன் முகாம்கள் வருகிற 1–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிர்காகளிலும் உள்ள கிராமங்களில் நடத்தப்பட இருக்கிறது.
இதில் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன. கடந்த ஆண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 18 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.90 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.
150 கோடி இலக்கு
அதேபோலவே இந்த ஆண்டும் 30 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.150 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி என்ற இலக் கினை அடைய, இன்னும் அதிகமான நபர்களுக்கு கறவை மாடுகள் வாங்கு வதற்கான கடனுதவிகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதன் மூலம் பால் உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் முன்னிலை வகிக்க நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு உழைத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இக்கூட்டத்தில் உதவி கலெக்டர் மதுசூதன் ரெட்டி இணை இயக்குனர் (வேளாண்மை) அழகிரிசாமி, உதவி மேலாளர்(ஆவின்) அன்பழகன், திருச்சிராப் பள்ளி மாவட்ட மத்திய கூட்டுநவு வங்கி களமேலாளர் துரை அரசன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் சிவக்குமார், அழகுராஜா, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் ராகுலன் மற்றும் தொடக்க வேளாண்மை மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் உள் பட பலர் கலந்து கொண்ட னர்.
Category: மாவட்ட செய்தி
0 comments