லப்பைகுடிகாடு அருகே பெண் தற்கொலை: போலீஸாருக்கு தெரியாமல் சடலம் புதைப்பு!
லப்பைகுடிகாடு அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலத்தை, போலீஸாருக்கு தெரியாமல் புதைத்தாக மங்கலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
லப்பைகுடிகாடு அருகே உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் மனைவி சல்ஜா (37). இவர் கடந்த சில நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் கடந்த 19}ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாராம். சல்ஜாவின் சடலத்தை அவரது உறவினர்கள் போலீஸாருக்கு தெரியாமல் புதைத்துவிட்டனர். தகவலறிந்த அத்தியூர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில், மங்கலமேடு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
Category: மாவட்ட செய்தி
0 comments