Home �
� பெரம்பலூரில் ஒரே நேரத்தில் 2 ஊசி போட்டதால் விபரீதம்.பிரசவித்த பெண்ணுக்கு பார்வை பறிபோனது!
Unknown |
11:23 PM |
0
comments
பெரம்பலூர்: பெரம்பலூர் குன்னம் அருகே காட்டுக்கொட்டகை பகுதியில் சித்ரா- சேகர் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதனிடையே, 5வது பிரசவத்துக்காக சித்ரா கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சுகப் பிரசவத்தில் சித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும், சித்ராவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில் செவிலியர்கள் 2 பேர், ஒரு ஊசி போடுவதற்குப்பதில் ஆளுக்கொன்றாக 2 ஊசிகள் போட்டுள்ளனர்.
ஊசி போட்ட சில மணி நேரத்திலேயே சித்ராவுக்கு மயக்கம் ஏற்பட்டதோடு கண் பார்வையும் படிப்படியாக மங்கத் தொடங்கி, சிறிது நேரத்தில் முற்றிலும் பார்வை பறிபோனது. இதனால் பதறிய சித்ராவின் கணவர், மருத்துவர், செவிலியரிடம் கூறினார். சித்ராவை மருத்துவர்கள் மீண்டும் பரிசோதித்த பிறகு தான், செவிலியர்கள் ஒரு ஊசிக்குப் பதிலாக கவனக்குறைவாக இரண்டு ஊசிகள் போட்டது தெரியவந்தது. அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் மனைவியின் பார்வை பறிபோனதாக கணவர் தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டரிடம் சேகர் புகார் தெரிவித்தார்.
Category:
About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!
0 comments