பெரம்பலூரில் 3 நட்சத்திர அந்தஸ்துடன் தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டல்ஸ் & மஹால் நேற்று திறக்கப்பட்டது!
பெரம்பலூர், நவ. 8:
பெரம்பலூரில் 3 நட்சத்திர அந்தஸ்துடன் தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டல்ஸ் & மஹால் நேற்று திறக்கப்பட்டது.
பெரம்பலூர் பாலக்கரையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் சார்பாக திருச்சி, சென்னை பெருநகரங்களுக்கு இணை யான 3 நட்சத்திர அந்தஸ்து கொண்ட தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டல்ஸ் அண்டு மஹால் கட்டப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட தங்கும் அறைகளுடன், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள், வரவேற்பு விழா, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த ஏதுவான பிரமாண்ட மஹாலும் கட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை இதன் திறப்புவிழா கோலாகலமாக நடந்தது.
விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீல்ராஜ், துணைத்தலைவர்கள் கதிரவன், அனந்தலட்சுமி, இயக்குநர்கள் மணி, ராஜபூபதி, நிர்வாக அலுவலர் ராஜசேகர், டாக்டர்கள் வினோத், சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திருச்சி மத்தியமண்டல காவல் துறைத்தலைவர் ராமசுப்பிரமணி ஹோட்டல் மற்றும் மஹாலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத்தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ், சிவானி குரூப்ஆப் இன்ஸ்டிடியூசன் தலைவர் செல்வராஜ், முன்னாள் சேர்மன்கள் அட்சயகோபால், ராஜாராம், கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் வரதராஜன், சிவசுப்ரமணியன், டிஎஸ்பி சுஹாசினி மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தோர், கல்லூரி முதல்வர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments