அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் எவை? : தெரிந்து கொள்ள சில டிப்ஸ்...
.
ஒவ்வொரு கல்வி நிறுவனமும் அந்தந்த படிப்புக்குரிய கவுன்சிலிடம் முறைப்படி பதிவு செய்து அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்ற நிறுவனங்களில் இருந்து பெறப்படும் படிப்பு சான்றிதழ்கள் மட்டுமே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். விவரம் தெரியாமல் பணத்தை செலுத்தி விட்டு ஏமாறாமல் தடுப்பதற்கு முன்கூட்டியே கல்லூரிகள் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எந்த படிப்புக்கு எங்கு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிய சில டிப்ஸ்...
* இன்ஜினியரிங் பட்டப்படிப்புகள்(Engineering Course) அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரம்(AICTE All India Council for Technical Education) மற்றும் அந்தந்த மாநில தொழில்நுட்ப பல்கலைக் கழக அனுமதியும் பெற்றிருக்க வேண்டும்.
* மருத்துவ படிப்புகள் (Medical Course) இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் (MCI Indian Medical Council) மற்றும் அந்தந்த மாநில மருத்துவ பல்கலைக் கழக அனுமதியும் பெற்றிருக்க வேண்டும்.
* வேளாண்மை படிப்புகள் (Agricultural Course) இந்திய வேளாண் ஆய்வு கவுன்சில்(ICAR Indian Council For Agricultural And Research) அங்கீகாரம் மற்றும் அந்தந்த மாநில வேளாண்மை பல்கலைக் கழக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
* பல் மருத்துவ படிப்புகள் (Dental Course) இந்திய பல் மருத்துவ கவுன்சில் (DCI Dental Council of India) அங்கீகாரம் மற்றும் அந்தந்த மாநில மருத்துவ இயக்குனரகத்தின் அனுமதியும் பெற்றிருக்க வேண்டும்.
* மருந்தாளுனர் பட்ட / பட்டய படிப்புகள் (Pharmacy Course) இந்திய பார்மசி கவுன்சில்(Pharmacy Council of India) அங்கீகாரம் மற்றும் அந்தந்த மாநில மருத்துவ இயக்குனரகத்தின் அனுமதியும் பெற்றிருக்க வேண்டும்.
* சட்டப் படிப்புகள் (Law Degree Course) இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் (Bar Council of India) மற்றும் அந்தந்த மாநில சட்டப் பல்கலைக் கழக அனுமதியும் பெற்றிருக்க வேண்டும்.
* ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் (Teacher Training Courses) தென் மண்டல ஆசிரியர் பயிற்சி குழுமத்தின் (NCTE National Council for Teacher Education)அங்கீகாரம் மற்றும் அந்தந்த மாநில ஆசிரியர் பயிற்சி இயக்குனரகத்தின் அனுமதியும் பெற்றிருக்க வேண்டும்.
* கலை - அறிவியல் பட்டப்படிப்புகள் (Arts - Science Courses) கல்லூரியின் அருகாமையில் உள்ள பல்கலைக் கழக அனுமதியும் மற்றும் பல் கலைக் கழக மானியக் குழுவின் (University Grant commission) அங்கீகாரமும் பெற்றிருக்க வேண்டும்.
* பாலிடெக்னிக் பட்டயப்படிப்புகள் (Polytechnic Diploma Courses) அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன் சில் அங்கீகாரம் மற்றும் அந்தந்த மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அனுமதியும் பெற்றிருக்க வேண்டும்.
* தொழில்நுட்ப படிப்புகள் (ITI Courses) தேசிய வேலைவாய்ப்பு பயிற்சி கவுன்சிலின்(National Council for Vocational and Training, New Delhi) அங்கீகாரமும் மற்றும் மாநில வேலை வாய்ப்பு பயிற்சி இயக்குனரகத்தின் (State Vocational and Training Centre, Chennai) அனுமதியும் பெற்றிருக்க வேண்டும்.
Category: உயர் கல்வி
0 comments