பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவகல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்தப்படும்
பெரம்பலூர்,மே13:
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவகல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதாக கலெக்டர் தரேஸ் அகமது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத மாவட்டங்களில் தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உயர் சிகிச்சை மருத்துவமனைகளாக செயல்பட்டு வருகின்றன. சில நேரங்களில் நோயாளிகளை மேல்சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி உள்ள மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்கள். இதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையையும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி
0 comments