அபுதாபியில் புதைமணலில் சிக்கி 2 தமிழர்கள் [இந்தியர்கள்] பரிதாப பலி.
துபாய், மே 16-
அபுதாபியில் உள்ள அல் ஜப்ரானியா பகுதியில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை அங்கு வேலை செய்துக்கொண்டிருந்த இந்தியாவை சேர்ந்த ராம்குமார்(35), செல்வராஜ்(28) ஆகியோர் அப்பகுதியில் உள்ள புதைமணலில் சிக்கி புதையுண்டனர்.
மற்ற தொழிலாளர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அல் மக்காம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மீட்பு படையினர் வந்து புதையுண்டவர்களை மீட்பதற்குள் ராம்குமார், செல்வராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதை கட்டுமான நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அபுதாபி மீட்பு துறை உயரதிகாரி இபுராகீம் அலி அமேரி கூறினார்..
Category: அபுதாபி, உலக செய்தி
0 comments