ஆன்லைன் வர்த்தகத்தால் வேலைவாய்ப்பு அதிகரிப்பு!
புதுடெல்லி: ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து பொருட்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், தாங்கள் விரும்பும் பொருளை ஆன்லைனில் பார்த்து அதை ஆர்டர் செய்தவுடன் வீட்டிற்கே வந்து கொடுக்கிறார்கள் என்பதால் தான். இந்த ஆன்லைன் வர்த்தகம் இன்னொரு பக்கம் வேலை வாய்ப்புகளை அதிகளவில் தருகிறது என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. பொருட்களை டோர் டெலிவரி செய்யும் வேலையில் 20 முதல் 25 வயதிலான இளைஞர்கள் அதிகளவில் ஈர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் வியாபாரம் அதிகரிப்பதால் இந்த துறையில் அடுத்த சில ஆண்டுகளில் 1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று வல்லுநர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.
Category: மாணவர் பகுதி
0 comments