வி.களத்தூர் தவ்ஹீத் மர்க்கஸில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை!
வி.களத்தூர் தவ்ஹீத் மர்க்கஸில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இன்று காலை முதல் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடி வருவதை காணமுடிந்தது.
வி.களத்தூரிலுள்ள தவ்ஹீத் மர்க்கஸில் காலை 7 மணி அளவில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டு தொழுகையை நிறைவேற்றினர். தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.










புகைப்படம் : ஜியாவுல் ஹக்.
Category: உள்ளுர் செய்தி
0 comments