மில்லத் நகரில் இன்று நடைபெற்ற பக்ரீத் பெருநாள் கொண்டாட்டம்!!
தமிழகம் முழுவதும் இன்று தியாக திருநாளாம் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக மில்லத் நகரிலும் இன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. இன்று காலை முதல் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடனும் உர்ச்சாகத்துடனும் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடி வருவதை காணமுடிந்தது.
மில்லத்நகர் பள்ளிவாசல் மைதானத்தில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகைக்கு மௌலவி அஸ்ரப் அலி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த சிறப்பு தொழுகைக்கு சிறியவர் முதல் பெரியர்கள் அனைவரும் வந்திருந்து தங்களது தொழுகையை நிறைவேற்றினார்கள்.
தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் தங்களை கட்டித்தழுவியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர். மைதானம் முழுவதும் நிறைந்துவிட்டதால் அருகிலுள்ள தெருக்களிலும் தொழுகை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளுர் செய்தி
0 comments