சவுதி மன்னரின் விருந்தாளியாக தேர்வு செய்யபட்ட ஹம்ஸா. பாங்கோசையால் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்ட அலெக்ஸான்டர்.

ஹம்சா சவுதி அரசின் விருந்தாளிகளாக சவுதி மன்னரின் சொந்த செலவில் ஹஜ்ஜுக்கு இந்த ஆண்டு அழைத்து வர பட்டுள்ள 2400 ஹாஜிகளில் ஒருவர் தான் பிரான்ஸ் நாட்டை சார்ந்த ஹம்ஸாவாக மாறியுள்ள அலெக்ஸான்டர்.
இஸ்லாத்தின் ஒவ்வொரு அம்சமும் மனித மனங்களை ஈர்க்கும் வலிமை கொண்டதாக இருப்பது போல் இஸ்லாமிய பாங்கோசையும் மனித மனங்களை கவர்ந்திலுக்கும் வலிமை கொண்டது என்பதை அலெக்ஸான்டரின் மனமாற்றம் உறுதி செய்திருக்கிறது.
அவர் தனது மனம் மாற்றம் குறித்தும் இஸ்லாத்தை ஏற்று கொண்டது குறித்தும் சவுதி அரேபியாவின் பிரபல வார இதழ்களில் ஒன்றான `உகாள் ’ இதழின் முகவரோடு மனம் திறந்து உரையாடினார்.
அந்த உரையாடலில், தாம் ஆப்ரிக்காவில் இருந்த காலங்களில் அங்கு இறை இல்லங்களில் இருந்து ஒலிக்கும் பாங்கோசை தனது உள்ளத்தை கவர்ந்த தாகவும் அதை தொடர்ந்து தாம் ஆறு ஆண்டுகள் இஸ்லாத்தை ஆய்வு செய்ததாகவும் இறுதியில் இஸ்லாமிய மார்க்கம் இறை மார்க்கம் என அறிந்து கொண்டதாகவும் கூறினார்.
அதன் பிறகு உம்றா செய்ய வேண்டும் என்ற நாட்டத்தில் 7000 கிலோ மீட்டர் தூரத்தை தரை மார்க்கமாக தனது வாகனத்தில் கடந்து நைஜிரிய வந்துள்ளார்.
அங்கு உள்ள சவுதி தூதரகத்தில் தனது நிலை விளக்கி விசாவுக்காக காத்திருந்ததாகவும், அவருக்கு இறுதியில் இப்போது விசா கிடைக்காது என்று எண்ணி தமது நாட்டிற்கு திரும்பும் போது தான் 2014 ஹஜ் செய்வதற்கு சவுதி மன்னரின் விருந்தாளியாக தேர்வு செய்யபட்டவர்களில் உங்களது பெயரும் உள்ளது என்ற செய்தியை சவுதி தூதரகம் எனது கைபேசியில் தகவல் தெரிவித்ததுள்ளது.
உம்றா செய்ய எண்ணிய எனக்கு ஹஜ் செய்யும் பாக்கியத்தையே அதுவும் சவுதி மன்னரின் விருந்தாளியாக செல்லும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி நான் அகம் மகிழ்ந்தேன். இப்போது இந்த புனித தலத்தில் மன நிறைவோடு எனது கடமைகளை ஆற்றி கொண்டுள்ளேன் என அவர் கூறினார்.
தகவல். செய்யதலி ஃபைஜி: முத்துப்பேட்நிவ்ஸ்
Category: வளைகுட செய்தி
0 comments