.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மூளைச் சாவு என்பது மரணமா..? உடல் உறுப்பு பெற செய்யப்படும் படுகொலையா…?

Unknown | 7:00 PM | 0 comments



தினமலர் நாளிதழ் (18-10-2014) `இது உங்கள் இடம்’ பகுதியில் அதன் வாசகர் புவனகிரி கு.அருணாசலம் எழுதிய கருத்து கடிதம் மிகுந்த முக்கியத்துவத்துடன பிரசுரிக்கப்பட்டுள்ளது.`

ஹிதேந்திரன் காட்டிய வழியில்’ என்ற தலைப்பில் வெளியான அந்த கடிதம் இஸ்லாமிய சமுதாயத்துக்கு ஒரு அறிவுரையை வழங்கி யுள்ளது.“

உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதன் மூலம் ஏராளமானோர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு உள்ளது. 2008-ம் செப்டம்பர் 23ஆம் தேதி ஹிதேந்திரன் உடல் உறுப்புகளை தான மாக வழங்கியதன் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வு மூல மாக கடந்த 6 ஆண்டு காலத்தில் அதாவது 2008 முதல் 2014 ஆகஸ்டு வரை 504 பேர் உடல் உறுப்பு தானம் கொடுத்து அதன் மூலம், 2,779 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

பெரும்பாலும் சாலை விபத்துகளில் மூளைச்சாவு அடைப வர்களின் உடல் உறுப்பு கள்தான் தான மாக வழங்கப்படுகின்றன.

மூளைச்சாவு அடைபவர்கள் உயிர் பிழைக்க வேறு வழியில்லை என்ற நிலையில் அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க சம்பந்தப்பட்ட குடும் பத்தினரிடம் மருத்துவர்கள் பக்குவமாக கூறுவதால், இந்த மாதிரியான உடல் உறுப்பு தானம் பெருமளவில் நடக்கிறது.

சமீபத்தில் கூட கடலூர் மஞ்ச குப்பத்தைச் சேர்ந்த ஹைதர் அலி என்பவர், சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த அன்பு மகள் ரிஹானாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினார்.

அதன் மூலம் 7பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இவ்வாறான தகவல்கள் இடம் பெற்றுள்ள அந்த வாசகர் கடிதத்தில் பொதுவாக, இஸ்லாமிய சகோதரர்கள் குருதி தானம் கொடுப்பதில் முதலிடத்தில் உள்ளனர்.

ஆனால், அவர்களின் வழக்கப்படி, இறந்த பின்பு உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன் வருவதில்லை. ஹைதர் அலி, தன் அன்பு மகள் ரிஹானாவின் உடல் உறுப்புகளை தானமாக வங்கி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறி விட்டாபர் என்ற வரிகளுடன் அந்த வாசகர் கடிதம் நிறைவு பெற்றுள்ளது.

நல்ல கருத்துதானே! வரவேற்க கூடியதுதானே! என இதனை எடுத்துக் கொள்ளலாமா? உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து இஸ்லாமிய மார்க்க நிலைப்பாடு என்ன? என்ப தனை மார்க்க அறிஞர் பெருமக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் – தெளிவு பெறவும் வேண்டிய ஒன்று.

அத்துடன் இங்கு நாம் கவனிக்க வேண்டிய மருத்துவரீதியான ஒரு முக்கிய அம்சம் ஒன்று உள்ளது.அது என்னவென்றால், `மூளைச்சாவு’ அடைந் தவர்களை குணப் படுத்த முடியாது என கருதி அவர்களை ஈவு இரக்கமில்லாமல் படு கொலை செய்யப்படுவதும், அவ்வாறு படுகொலை செய்து, ஒரு உடலிலிருந்து வலுகட்டாயமாக உயிரை போக்கி விட்டு, அந்த உடலிலுள்ள உறுப்புகளை `தானம்’ என்ற பெயரில் கொள்ளையடிக்கும் செயலை எப்படி ஜீரணித்து கொள்ளமுடியும்.`

தானம்’ என்ற பெயரில் இறந்தவரின் உடலி லிருந்து எடுக்கப்படும் உறுப்புகள் தேவையுடைய மற்றவருக்கு இலவசமாக விலை இல்லாமல்தான் வழங்கப்படுகிறதா என ஆராய்ந்தால் அவ்வாறு இல்லை என்பதுதான் விடையாக கிடைக்கிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கட்டணம் என்ற பெயரில் அரசு மருத்துவ மனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப் படுகிறது.`

உறுப்பு தானம் – அதனை மற்றவருக்கு பொருத்த கட்டணம்’ என்பது பெரும் கொள்ளை என்ற கருத்து நிலவுகிறது. லாப நோக்கத்தில் வியாபார அணுகுமுறைக்கு `மூளைச்சாவு’ நடத்தப்பட்டு கொலைகள் அரங்கேற்றப் படுகின்றன என்பதை ஆங்கில வழி மருத்துவ முறையான `அலோபதி’ அல்லாத மற்ற பல மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.“மூளைச்சாவு என்ற பெயரில் உடல் உறுப்புகளை எடுப்பது, படுகொலையை ஒத்ததாக இருப்பதாக கியன் மருத்துவரான சீன மருத்துவ சிகிச்சை முறை யில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் ஷேக் அலாவுதீன் விரிவாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.ஆங்கில வழி மருத்துவம் மனிதநேய தன்மைக்கு எதிரானதாக போய்க்கொண்டிருப்பதை ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்களால் வேடிக்கை பார்க்க முடியாது. அதனை தடுத்து நிறுத்த சட்டரீதி யான முயற்சிகள் தேவை.

நன்றி: மணிச்சுடர்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1