ஐக்கிய அரபு அமீரகம்( U.A.E.) பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்!
அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க ஒரு பாலைவன நாடாகும். இது அபுதாபி, அஜ்மான், துபாய், புஜெய்ரா, ராஸ் அல் கைமா, சார்ஜா மற்றும் உம் அல் குவெய்ன் என்னும் அமீரகங்களை உள்ளடக்கியது. ஓமான், சவுதி அரேபியா மற்றும் கட்டார் இதன் அயல் நாடுகளாகும்.
ஐக்கிய அரபு அமீரகம் எண்ணெய், இயற்கை வாயு வளங்களைக் கொண்டது. 1970களில், நிகழ்ந்த நேரடியான வெளிநாட்டு முதலீடுகளினால் இந்நாடு செல்வம் கொழிக்கும் நாடாக மாறியது.
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் உயர்ந்த மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் உலக அளவிலும் 39 ஆவது இடத்தில் உள்ளது.
உயர் வாழ்க்கைத்தரத்தைக் கொண்ட நவீன நாடாக மாற்றம் பெற்றுள்ளது. இந் நாட்டின் நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி முன்னணி மேற்கு ஐரோப்பிய நாடுகளைவிட அதிகம் குறைந்தது அல்ல. இதன் எண்ணெய் வருமானம் தொடர்பிலான தாராளமும், மிதமான வெளிநாட்டுக் கொள்கையும், இந்நாடு இப்பிரதேசத்தின் விவகாரங்களில் முக்கிய பங்கு வகிப்பதற்கு அனுமதித்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம் பின்வரும் அமீரகங்களைக் கொண்டுள்ளது:
* அபுதாபி
* அஜ்மான்
* துபாய்
* புஜெய்ரா
* ராஸ் அல் கைமா
* சார்ஜா
* உம் அல் குவெய்ன்
அபுதாபி :ஐக்கிய அரபு அமீரகத்தின் பகுதிகளான ஏழு அமீரகங்களில் பெரியது அபுதாபி அமீரகம் ஆகும். முழு நாட்டினதும் தலைநகரமான அபுதாபி நகரமும் இந்த அமீரகத்திலேயேயுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல் சட்டப்படி அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளரே முழுநாட்டினதும் ஆட்சித் தலைவர் (President) ஆவார்.
அஜ்மான் :ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் மிகச் சிறியதாகும். இதன் தலைநகரமும் அஜ்மான் ஆகும். இந்த அமீரகத்தின் பரப்பளவு 260 சதுர கிலோமீற்றர் மட்டுமே. பாரசீகக் குடாவையொட்டி அமைந்துள்ளது.
துபாய் : என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பெரிய அமீரகத்தையும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் குறிக்கும். இது மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது.நீண்டகாலமாகவே துபாய், முத்துக்குளிப்புப் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், அபுதாபிப் பகுதியிலிருந்து, “பனியாஸ்” என்னும் இனக்குழுவினர் மக்ட்டூம் குடும்பத்தினர் தலைமையில் இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு ஆரம்பமாகின்றது.
புஜேரா : என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்று. அந்த அமீரகத்தின் ஒரே நகரமும் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நாட்டின் கிழக்குக் கரையில் முழுமையாக அமைந்துள்ள ஒரே அமீரகம் இதுவேயாகும்.
ராஸ் அல் கைமா :ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியுள்ள ஏழு அமீரகங்களுள் ஒன்று. இதன் பரப்பளவு 656 சதுர மைல்கள் (1700 கி.மீ²) ஆகும். இது அரேபியத் தீபகற்பத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. இந்த எமிரேட்டின் மக்கள் தொகை 250,000 ஆகும்.
சார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் நாட்டின் கிழக்கு, மேற்கு இரண்டு கரைகளையும், அதாவது ஒரு பக்கம் பாரசீக வளைகுடாவையும், மறுபக்கம் இந்து சமுத்திரத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும் ஒரே அமீரகம் இதுவாகும். இது மேற்குக் கரையில் சார்ஜா மாநகரத்தையும், அதை அண்டியபகுதிகளையும், கிழக்குக் கரையில், கோர்பக்கான், திப்பா, — ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. தெற்கே துபாய் அமீரகமும், வடக்கே அஜ்மான் அமீரகமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கே, உம் அல் குவெய்ன், ராஸ் அல் கைமா, புஜேரா ஆகிய அமீரகங்களைத் தொட்டுச் செல்லும் இதன் எல்லையில் ஓமான் நாடும் உள்ளது.
தகவல் : விக்கிபீடியா தகவல் களஞ்சியம்

0 comments