பெரம்பலூரில் ராணுவஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி!
பெரம்பலூர்,அக்.20:
நவம்பரில் 19முதல் 26வரை 15மாவட்டங்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு தேசிய தடகளவீரர் இளங்கோவன் மூலம் சிறப்புப்பயிற்சி நேற்று தொடங்கியது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதிமுதல் 26ம்தேதி வரை இந்திய ராணுவத்தின் பல்வேறுநிலை பணிகளுக் கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் சான்றிதழ்சரிபார்ப்பு, உடற்தகுதி, ஓட்டப்பந்தயம், மருத்துவத் தகுதிகள்குறித்த தேர்வுகள் நடைபெற உள்ளன. முகாமில் அரிய லூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டி னம், திருவாரூர், புதுக் கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற் றும் காரைக் கால் உள்ளிட்ட 15 மாவட்டங் களைச் சார்ந்த தகுதி யான நபர்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அகமது தலைமையில் தேர்வில் பங்கேற்கும் நபர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித்தர சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்ட இளைஞர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளுக்காக அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் இந்திய ராணுவத்தில் சேர விருப்பமுள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும்மேற்பட்ட இளைஞர்களுக்கு தேசியத் தடகளவீரரும், பெரம்பலூர் ஆயுதப்படை காவலருமான நூத்தப்பூரைச்சேர்ந்த இளங்கோவன் என்பவர் மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இளங்கோவன் நடத்திய பயிற்சியில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ஓட்டப் பந்தய பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக மைதானத்திலிருந்து புறப்பட்ட இளைஞர்களுக்கு கலெக்டர் அலுவலகம், தேசியநெடுஞ்சாலை, துறைமங்கலம் 3 ரோடு, பாலக்கரை, வெங்கடேசபுரம், விளாமுத்தூர் சாலை வழியாக மைதானம் வரையென குறித்த நேரத்திற்குள் ஓடும் பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு அனை வருக்கும் உடற்பயிற்சி, தசைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்தப்பயிற்சி ராணுவத்திற்கான ஆட்கள்தேர்வு நடத்தப்படும் நவம்பர் 19ம்தேதி வரை அளிக்கப்படுமெனத் தெரிகிறது.
Category: மாவட்ட செய்தி
0 comments