மழைக் காலங்களில் பாதுகாப்பான குடிநீரை பயன்படுத்த வேண்டும்: கலெக்டர் தரேஸ் அஹம்மது வேண்டுகோள்!!
பெரம்பலூர்,அக்.20–
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் தண்ணீர் மூலம் பரவக்கூடிய டைபாய்டு, மஞ்சள் காமாலை மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஊராட்சியில் அனைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளிலும் 15 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து உலர வைத்து நீர் ஏற்ற வேண்டும். குளோரினேசன் செய்வதற்கு தேவையான ப்ளீச்சீங் பவுடரை தயார் நிலையில் இருப்பு வைக்கவும். 1000 லிட்டருக்கு 4 கிராம் ப்ளீச்சீங் பவுடர் போட்டு குளோரினேசன் செய்யவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து உடனடியாக சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீரை கொதிக்கவைத்து குடிப்பதால் கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகள் அழிக்கப்படும். எனவே பாதுகாப்பான குடிநீரை பயன்படுத்த வேண்டும்.
கொசுக்களால் பரவக் கூடிய டெங்கு, சிக்குன்குனியா மலேரியா ஆகிய நோய்கள் ஏற்படாமல் தடுக்க வீட்டில் சேமித்து வைக்கும் நீரை மூடிவைக்க வேண்டும். 3 நாள்களுக்கு மேல் தண்ணீரை தொட்டிகள் பாத்திரங்களில் சேமித்து வைக்கக்கூடாது. வீடுகளின் அருகே உள்ள பகுதிகளில் உரல் டயர் உடைந்த மண்பாண்டங்கள் காலி டப்பாக்கள் தேங்காய் மட்டைகள் பிளாஸ்டிக் பொருள்கள் ஆகிய நீர் தேங்கியுள்ள இடங்களை அழிக்க வேண்டும். கொசுப்புழு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறிந்து அவைகளை அழிக்க தங்கள் வீடு தேடிவரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
எனவே வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மலேரியா அலுவலர் (9443517431) மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு மருத்துவ அலுவலர் (8903877848) வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் பெரம்பலூர் (9585258036) வேப்பூர் (9994567121) ஆலத்தூர் (9442926800) வேப்பந்தட்டை (9884761365) ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.

Category: மாவட்ட செய்தி
0 comments